மொபைலில் Gmail Password
Gmail Password மறந்துபோவதற்கு முன் செய்யவேண்டியது. நமது ஜிமெயிலில் நுழைந்து Accounts பக்கத்தில், Change Password Recovery Options ஐத் தேர்வுசெய்ய வேண்டும். அதில் நமது மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டால், அடுத்த முறை Password மறந்துபோனாலும் Security கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் Password Reset செய்யும் Code நமது மொபைலுக்கே வந்துவிடும்.
அதனைப் பயன்படுத்தி உள்நுழைந்து நாம் Password ஐ மாற்றிக் கொள்ளலாம்.நமது மற்ற மெயில் அக்கவுண்ட்களைப் பார்க்க வேண்டியதில்லை. படத்தைப் பெரிதாக்கி விவரங்கள் பெறவும்.
இதெல்லாம் சரியாக நடக்க மொபைலைத் தொலைக்காமல் இருப்பது முக்கியம்!
பாஸ்வேர்ட் சில யோசனைகள்:
* முன்னாள் அல்லது இந்நாள் காதலியின் பெயரை வைப்பது தவறல்ல. கூடவே கணிக்க இயலாதபடி சில எண்களும் இருப்பது நல்லது.
* பாஸ்வேர்ட் தொலைந்தால் கேட்கப்படும் கேள்விக்கான பதிலும் யூகிக்க முடியாதபடி இருந்தால் உங்கள் Account உங்களுக்கே! நீங்கள் மட்டுமே பதிலளிக்கக் கூடிய வகையான கேள்விகளைக் கொடுத்து வைக்கவும். சொந்தக் கேள்வியில் பிறந்த ஊர், நாயின் பெயர் என்றெல்லாம் எழுதுபவர்களுக்கு எனது அனுதாபங்கள்.
* நம்பகமான நண்பர்களுக்கு மட்டும் மெயில் முகவரியைக் கொடுக்கவும்.
* பதிவு செய்வதற்கான தளங்களுக்கென தனியாக ஒரு முகவரி ஏற்படுத்திக் கொள்ளவும்.
* இதெல்லாம் செய்தும் உங்கள் முகவரி களவாடப்பட்டால், Hacking பழகவும்!