Widget By Devils Workshop
புதிய இடுகைகள் விரைவில் vanakkam

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text





என்னுடைய மற்ற தளங்கள்


1. கிரிக்கெட்


2. உடுமலைப்பேட்டை


3. மொபைல் ட்ரிக்ஸ்


4. தமிழ் தகவல்


5. இயற்பியல்


6. கோவை மண்டலம்


7. பாடல்

அனைவரையும்வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

Clipart

திருக்குறள்

Tuesday, November 30, 2010

ஆன்லைன் பாடபுத்தங்கள்

பாடபுத்தங்களுக்கு என்று ஒரு தனியான ஒரு  வெப்சைட் லிங்க். இது பள்ளி மாணவர்களுக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும் .இந்த புத்தங்கள் முதல் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை மற்றும் DTEd வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரபட்டுள்ளது
இந்த தளத்துக்கு செல்ல கீழ் உள்ள தளத்தை கிளிக் செய்யவும் .



ஆன்லைன் பாடபுத்தங்கள்

Download As PDF

Monday, November 29, 2010

ஆன்லைன் கணிப்பான்

இப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்து வித  கால்குலேசன் போடா ஒரு ஆன்லைன் கணிப்பான்  அந்த தளத்துக்கு செல்ல கீழே உள்ள 
ஆன்லைன் கணிப்பான் ஐ கிளிக் செய்யவும்
Download As PDF

Saturday, November 27, 2010

மும்பைத் தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு - மும்பையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அஞ்சலி!


166 பேரைப் பலியெடுத்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் நடந்த இராண்டவது ஆண்டு நினைவு தினம் இன்று.  மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மும்பையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்ததப்பட்டது.
2008 நவம்பர் மாதம் 26ந் தேதி,  மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்து பேர், நகரின் முககிய இடங்களில்  நடத்திய கொலை வெறித் தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். பத்துத் தீவிரவாதிகளில் ஒன்பது பேர் படைகளின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட, ஒருவன் மடடும் உயிருடன் பிடிப்பட்டான். அவன் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மரணதண்டனை தீர்ப்பாகியுள்ளது.

இன்றைய இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,  தெற்கு மும்பையில் உள்ள போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். காவல்துறையினரால் பிரமாண்ட மரியாதை அணிவகுப்பும் நிகழ்தப்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்தில் பலியாகிய காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரும், இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்கள். கலங்கி நின்ற அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

தாக்குதலில் அதிகம் பேர் கொல்லப்பட்ட தாஜ் ஹோட்டல் பகுதியில், நேற்றிரவு முதலே பொது மக்கள் அஞ்சலி செலுத் தொடங்கியிருந்தனர். காலையில் மெழுகுவர்த்திகளை ஏற்றியும், மலரஞ்சலி சலுத்தியும் கொல்லப்படவர்களை நினைவு கூர்ந்தனர்.

டெல்லியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவு நாளில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு, அவர்கள் குடும்பத்தினர்க்கும் ஆறுதல் தெரிவிப்பதாகவும், அந்தத் துயர் மிகு நாட்களில்  மும்பை மக்கள் காட்டிய தீரம், விவேகம், தைரியம், மன உறுதி, தியாகத்தை நாம் போற்றுவதாகவும், அதற்குத் தலைவணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் இச்சம்பவத்தில் பலியானவர்கள் நினைவு கூரப்பட்டார்கள். இத்தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்களில் அமெரிக்கர்கள் ஆறு பேரும் அடங்குவர்.  இது தொடர்பில்  அமெரிக்க வெளியிறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியான சம்பவத்தை நினைவுகூரும் இந்த தருணத்தில் இந்தியாவின் சோகத்தில் நாங்கள் பங்கேற்கிறோம். எப்போதும் இந்தியாவுக்கு அமெரிக்கர்களின் ஆதரவு உண்டு எனவும்  குறிப்பிட்டுள்ளார்.
Download As PDF

Monday, November 22, 2010

ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான்

இது என்னுடைய நூறாவது பதிவு ஆகும் . என்னுடைய வலைபதிவுக்கு வந்த அனைத்து நண்பர்க்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .மேலும் மேலும் உங்கள் ஆதரவை தருமாறு உங்களை கேட்டுகொள்கிறேன் 






 .
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்யும் கெüரவம் மிக்க நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
திரைப்படத்துறையில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர். 1929-ம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள சிறந்த திரைக்கலைஞர்கள் ஆஸ்கர் விருது பெறுவதையே தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் 2009-ம் ஆண்டுக்கான நடுவர் குழுவில் பொறுப்பேற்க ஆஸ்கர் விருது கமிட்டியிடமிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 82-ம் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் பொறுப்பேற்க ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 139 பேருக்கு இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களோடு சேர்ந்து, உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 6,000 திரைத்துறை சாதனையாளர்கள் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கத் தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள். அவர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இயக்குநர் மீரா நாயர், ஹாலிவுட் பிரபலங்கள் வில் ஸ்மித், க்வென்டின் டரான்டினோ, ஜேக் நிக்கல்ஸன், ஹக் ஜேக்ஸன், பீட்டர் கேப்ரியல் ஆகியோரும் அடங்குவர்.
ஆஸ்கர் விருதுக்கு ஒரு முறையாவது பரிந்துரை செய்யப்பட்டவர்களே இந்தத் தேர்வுக்குழுவில் இடம்பெற மூடியும். இசைத்துறையில் தன்னுடைய பங்களிப்பால் சிறந்த சாதனை படைத்ததற்காகவும் 2008-ம் ஆண்டு "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக சிறந்த பாடல் இசையமைப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதாலும் ஏ.ஆர்.ரஹ்மான், இருவேறு கருத்துக்கு இடமில்லாமல் இந்த நடுவர் குழுவில் பொறுப்பேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. 43 வயதாகும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது "கப்ஃபுள்ஸ் ரெட்ரீட்', "எ நைட் ஆஃப் பேúஸஜ்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வருகிறார். ஆஸ்கர் விருதுகளை வென்ற பிறகு ஏராளமான ஹாலிவுட் படங்களில் பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழில் மணிரத்னத்தின் "ராவணா', ரஜினியின் "எந்திரன்', கெüதம் மேனனின் "விண்ணைத்தாண்டி வருவாயா' உள்பட 7 திரைப்படங்களுக்கு இப்போது இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.



Download As PDF

Saturday, November 20, 2010

ரஜினி காருக்கு பின்னால் சென்ற ரசிகர் பலி!


மதுரையில் நடிகர் ரஜினியின் காரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர் ஒருவர் விபத்தில் பலியானார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், சினிமா தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி திருமணம் மதுரையில் நடந்தது.


இதில் திரையுலகை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினியும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்தார்.

பசுமைலை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ரஜினி, அங்கிருந்து திருமணத்துக்காக காரில் தமுக்கம் மைதானத்திற்கு புறப்பட்டார். அப்போது ரஜினியை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

ஓட்டலில் இருந்து வெளியே வந்த ரஜினியின் கார் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து ரசிகர்கள் சுமோ காரில் தொங்கியபடி அந்த காரை பின் தொடர்ந்தனர்.

பழங்காநத்தம் சிக்னல் அருகே வந்தபோது எதிரே வந்த டூ வீலருக்கு வழி கொடுப்பதற்காக சுமோ கார் வளைந்தபோது, தொங்கிக் கொண்டிருந்த மதுரை பந்தடி 8வது தெருவைச் சேர்ந்த மருந்து விற்பனையாளர் கார்த்திகேயன்(33) மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த அழகுபாண்டியன்(30) நெல்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ்மந்திரி(29) ஆகியோர் கீழே விழுந்தனர்.

இதில், தலையில் அடிபட்ட கார்த்திகேயன், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது Download As PDF

Thursday, November 18, 2010

குழந்தைகளின் மொழியறிவை வளர்க்கும் இசை!

இசையானது குழந்தைகளின் மூளை ஒலி நுண்ணுணர்வுத் திறனை அதிகரிக்கிறது, அதன் மூலம் அவர்களது மொழியைக் கற்கும் திறனை மேம்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொழியறிவு என்கிறபோது அதில் பேச்சும் அடக்கம். இது தொடர்பான ஆய்வை அமெரிக்காவின் சிகாகோ நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் மேற்கொண்டனர். அதில், மூளையின் அறிவு வளர்ச்சி நிலையில் இசையானது அதிகப் பலனளிப்பதாகக் கண்டறிந்தனர்.

அதிலும் குழந்தைகளுக்கு இசை அதிக நன்மை அளிக்கிறது. குறிப்பாக, கற்றல் குறைபாடு மற்றும் `ஆட்டிச’ பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு. இசைத் திறனுக்கும், இசை முறைமைகளைக் கிரகிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இசைக் கருவியை வாசிப்பது, மொழியைக் கற்கும் குழந்தையின் திறனில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதும் தெரியவந்திருக்கிறது. ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்த பேராசிரியை நினா கிராஸ் கூறுகையில், இசைக் கருவியை வாசிப்பது, மூளைத் தண்டின் தானியக்கச் செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மூளையின் கீழ்ப் பகுதியான இது, சுவாசித்தல், இதயத் துடிப்பு, ஒலிகளுக்கான `ரியாக்ஷன்’ ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிப்பதாகும். அவர் மேலும் கூறுகையில், “இசை வாசிப்பது, ஒலி சம்பந்தப்பட்ட திறனைத் தூண்டி வளர்க்கிறது. அதாவது ஒருவரது சொந்த இசைக் கருவியின் ஒலி, அதன் இனிமை, `ரிதம்’ ஆகியவற்றை ஈர்க்கும் திறனை. இது, சத்தமான வகுப்பறைகளில் பேச்சை வளர்த்துக் கொள்வதற்கு குழந்தைகளுக்கு உதவும். குரலில் சிறுசிறு மாற்றங்களை, ஏற்ற இறக்கங்களை செய்வதன் லம் குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்துவது என்ற பேச்சு ணுக்கத்தைத் துல்லியமாக அறிய குழந்தைகளுக்குக் கை கொடுக்கும்” என்று விளக்கமாகத் தெரிவிக்கிறார்.

`ஆட்டிசத்தால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகள் இசைக்கு நன்றாக பதில் செயல்பாட்டைக் காட்டுகிறார்கள், அவர்கள் இசையை விரும்புவது நன்றாகத் தெரிகிறது என்று அமெரிக்க `ஆட்டிச’ கழகத்தின் பேச்சாளர் பெண்மணி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “குழந்தைகள் தொடர்புகொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் கலந்துரையாடவும், `ரிலாக்ஸ்’ ஆகவும், உணர்வுகளையும் வெளிப்படுத்தவும் இசை உதவுகிறது என்பது தெரிகிறது” என்றார். இசைக்கு பல இனிய, நன்மை தரும் தன்மைகள் உண்டு, நோயாளிகளுக்கு நலமளிக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அது குழந்தைகளின் மொழியறிவை, மொழித் திறனை வளர்க்கவும் உதவுகிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
  Download As PDF

வேண்டாத விளம்பரங்களை தடுப்பது எப்படி ?



விளம்பரங்கள், விளம்பரங்கள் – நாம் இவற்றை விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. சாலையில் செல்லும்போதும், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும், மொபைல் போனிலும், தொலைபேசி யிலும், இணைய உலா செல்கையிலும் இவை நம் கவனத்தைத் திருப்பி நம்மை காய்ச்சுகின்றன. பல நேரம் இவற்றை நாம் விரும்புவதில்லை. வேண்டாத விளம்பரங்கள் எதற்காக நம் முன்னே வருகின்றன என்று எரிச்சல் அடைகிறோம். இதில் இணையத்தில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத விளம்பரங்கள் வேறு காட்டப்படுகின்றன.

இணையத்தில் இந்த விளம்பரங்கள் வருவதனைத் தடை செய்திடும் வழிகளை பிரவுசர்கள் தருகின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பராவில் இந்த தடையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். இவை தவிர இலவச தடை செய்திடும் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைத் தடை செய்திடும் முன், இவை எந்த எந்த வடிவங்களில் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். முதலாவதாக பாப் அப் வகை.இவை புதிய ஒரு விண்டோவில், நாம் பார்க்கும் இணைய தளங்களுக்கு மேலாக தோன்றுகின்றன. எதிர்பார்க்காத நேரத்தில் வந்து, மறையாமல் அடம் பிடிக்கும் இவற்றை அனைவருமே விரும்புவதில்லை. அடுத்த வகை சிறிய படங்களாக, தளங்களில் ஊடுறுவும் கட்டங்கள்.

இவற்றில் பெரும்பாலானவை நாம் அலட்சியப்படுத்திவிடும் வகையிலேயே இருக்கும். அடுத்த வகை பிளாஷ் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வருபவை. இவை இணைய தளங்களில் அனிமேஷன்களாக நுழைபவை. இவற்று டன் புதியதாக ஒரு வகை இப்போது அதிகம் வருகின்றன. நம் கர்சர்களைக் குறிப்பிட்ட சொற்கள் அருகே கொண்டு செல்கையில் இந்த விளம்பரங்கள் தோன்றுகின்றன. இவை ஜாவா ஸ்கிரிப்ட் என்னும் ஆன்லைன் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. அதிக எரிச்சலைக் கொடுப்பவை இவைதான். இந்த விளம்பரக் கட்டங்களில் வலது மேல் மூலையில், இவற்றை மூடுவதற்கான அடையாளம் தரப்பட்டிருந்தாலும், அதனைக் கிளிக் செய்தாலும் மீண்டும் மீண்டும் வருகின்றன.
Download As PDF

Tuesday, November 16, 2010

உலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம்


கடல்நீரின் மேல்பகுதி​​ நடுப்பகுதி மற்றும் தரைப்பகுதிகளிலும் அலைபடும் இடங்களில் இருந்து ஆழ்கடல் பகுதிகள் வரை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் ஆழ்கடலில் மிகமிக வேகமாக செல்லும் ஓர் அரிய ஜீவன்களில் ஒன்றே மயில் மீன் Sailfish (Istiophorus platypterus) .


பறவைகளில் மயிலுக்கு தோகைகள் இருப்பதைப் போல இவ்வகை மீன்களுக்கும் தோகைகள் போன்று இறக்கைகள் இருப்பதால் இதனை மயில்மீன் என்கிறார்கள்.​ இவ்வகை மீன்களின் மேல்புறத்தில் இரு இறக்கைகளும் இவால் பகுதியில் ஒரு இறக்கையும் இருக்கும்.​ இந்த மீனின் மேல்தாடை கீழ் தாடையை விட இரு மடங்கு பெரிதாக இருக்கிறது.​ மீனின் உடல்பகுதியில் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட வெள்ளைநிற வரிக்கோடுகள் காணப்படுகின்றன.

பறவைகளுக்கு அலகு இருப்பது போல இதன் அலகும் சுமார் 10அடி வரை நீளம் உடையதாகவும்​​ மிகவும் கூர்மையானதாகவும் இருக்கிறது.​ இந்த அலகின் மூலம் படகுகளைக் கூட கொத்தி உடைத்து விடும் சக்தி உடையது.​ மீனின் மேல்பகுதி கரு ஊதா நிறத்திலும் ​ அடிப்பகுதி வெள்ளை நிறம் கலந்த பிரவுன் கலரிலும் காணப்படுகிறது.​ ஒரு வருடத்தில் 1.2மீ முதல் 1.5 மீ வரை வளரக் கூடியது.

சுமார் 100கிலோ வரை எடையுடைய இம்மீன்கள் 16 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறதாம்.​ ஒரு மீன் மட்டுமே குறைந்தது 2 லட்சம் மைல்களுக்கு மேல் கடலில் பிரயாணம் செய்வதுடன் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கும் மாறி​​ மாறிச் சென்று கொண்டேயிருக்கும்.

ஒரு மீன் மட்டும் 45லட்சம் முட்டைகள் வரை சங்கிலித் தொடர் போல இடுகிறதாம்.​ இடப்பட்ட முட்டைகள் தட்ப வெட்ப சூழ்நிலைகளைத் தாங்கி அதற்கேற்றவாறு மீன்குஞ்சுகளாக மாறிக் கொள்கின்றன.​ மத்தி​​ வஞ்சிரம்​​ கணவாய் மற்றும் தவளைகள் போன்றவையே இவற்றின் விருப்ப உணவு.​ இந்த மீனும் பெரும்பாலும் மனிதர்கள் சமைத்து சாப்பிடத்தான் பயன்படுகிறது என்றாலும் இவற்றைப் பிடிப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

கடல் விட்டு கடல் மாறிச் சென்று கொண்டே இருப்பதால் இவற்றின் இருப்பிடங்களைச் சரியாக அறிந்து கொண்டு அவற்றைப் பிடிக்க முடிவதில்லை.​ கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் ராக்கெட் வேகத்தில் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 109 கி.மீ வேகத்தில் செல்கிறது . (
68 miles per hour or109 km per hour)
இந்த ஃபாஸ்ட் சுவிம்மிங் ஜீவன்.
Download As PDF

24 விண் கற்களில் தண்ணீர் : நாசா கண்டுபிடிப்பு


 



நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன் ஓடம் கண்டுபிடித்தது. இதே போல சூரியனை சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
சூரியனை சுற்றி வரும் கோள்களை தவிர ஏராளமான விண்கற்களும் விண்ணில் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கற்கள் ராட்சத அளவில் இருக்கின்றன. அதாவது 200 கிலோ மீட்டருக்கு மேல் அகலமாக இருக்கின்றன.
அந்த கற்களை அமெரிக்காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹவாய் தீவில் ராட்சத டெலஸ்கோப்பை அமைத்து உள்ளனர். அதன் மூலம் இந்த கற்களை ஆய்வு செய்தனர்.
அதில் தண்ணீர் இருப்பது தெரிய வந்தது. உறைந்த நிலையில் மேல் பகுதிகளில் தண்ணீர் இருந்தன. தண்ணீர் இருப்பதால் அவற்றில் உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதுபற்றியும் ஆய்வு நடந்து வருகிறது.
Download As PDF

Sunday, November 14, 2010

மெட்டல் டிடெக்டர்கள் எப்படிச் செயல்படுகின்றது?


 
இந்த சட்டகத்திலிருந்து நிறைய ஒயர்கள் வெளியே செல்லும். சட்டகத்தின் மேற்பகுதியில் மெட்டல் டிடெக்டர் என்று எழுதப்பட்டிருக்கும். இந்த சட்டகத்தின் வழியே செல்பவர்கள் யாராவது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வெடி குண்டுகளையோ,ஆயுதங்களையோ வைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. குண்டுகளையோ, ஆயுதங்களையோ செய்ய குறிப்பிட்ட அளவு உலோகம் தேவைதானே? அப்படி, உலோகங்களால் செய்யப்பட்ட ஆயுதங்கள் ஒருவரிடம் இருக்கின்றனவா என்று இந்தக் கருவியின் மூலம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுகின்றனர். இதனால்தான் இது "மெட்டல் டிடெக்டர்' என்று அழைக்கப்படுகிறது.

ரயில் நிலையங்களிலும், முக்கியமான சில அரசு அலுவலகங்களிலும் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் மரத்தால் ஆன ஒரு சட்டகத்தை (இது கதவு நிலையைப் போன்று பெரிதாக இருக்கும்) வைத்திருப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருக்கலாம்.


 
இதே போன்று, காவல் துறையினர் தங்கள் கையில் நீள் வட்டவடிவிலான ஒரு கருவியை வைத்திருப்பார்கள். இது மெட்டல் டிடெக்டரின் இன்னொரு வகை. இந்தக் கருவி சிறிதாக எளிதில் எங்குவேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கும். இதை ஒருவரின் உடலுக்கு அருகிலும், அவர் வைத்திருக்கும் பைகளின் மீதும் காட்டுவதன் மூலம் அவரிடம் அபாயகரமான பொருட்கள் ஏதும் இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்கின்றனர். பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் இப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள்.சரி, ஒருவர் மறைத்து வைத்திருக்கும் உலோகத்தை ஒரு சிறிய கருவி எப்படிக் கண்டுபிடிக்கிறது?


ஒரு காந்தத் துண்டின் அருகே குண்டூசியையோ, ஊக்கையோ கொண்டு சென்றீர்கள் என்றால் அதைக் காந்தம் ஈர்க்கும். பக்கத்தில் வைத்தால், இழுத்து தன் மீது ஒட்டிக்கொள்ளும். காந்தத்தின் சுற்றுப்புறத்தில் உருவாகும் காந்தப் புலத்தால் இந்த ஈர்ப்புத் தன்மை உருவாகிறது. இப்படியாக பெரும்பாலான இரும்புக் கலப்பு உலோகங்கள் காந்தப் புலத்தின் அருகே செல்லும்போது, அந்தக் காந்தப் புலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன (காந்தப் புலம் என்பது, காந்தத்தின் ஈர்ப்பு விசை பரவியிருக்கும் பரப்பாகும்). குளத்தில் கல்லை விட்டெறிந்தால், அதன் தொடர் விளைவாக அலை அலையாக நீர் பரவுகிறது அல்லவா?

 இதைப் போலத்தான், காந்தமும் சுற்றுப்புறத்தில் தன் ஈர்ப்புத்தன்மையை அலை அலையாகப் பரவவிட்டிருக்கும்.மெட்டல் டிடெக்டர் எனப்படும் உலோகத்தைக் கண்டறியும் கருவிகளில், மின்சாரம் செல்லும் சர்க்யூட் பாதைகள் மிகவும் நுட்பமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். காந்தப் புலங்களில் மிகவும் நுணுக்கமாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட உணர்ந்து எச்சரிக்கை ஒலியெழுப்பும் வகையில் அந்தக் கருவி தயார் செய்யப்பட்டிருக்கிறது.கையடக்கமாக உள்ள மெட்டல் டிடெக்டரில் "காயில்' எனப்படும் இரண்டு கம்பிச் சுருள்கள் இருக்கும். இவை இரண்டும் ஒரே சக்திகொண்ட காந்தப் புலங்களை உருவாக்கும் திறன்கொண்டவை. இந்தக் கருவியின் அருகே ஒரு உலோகப் பொருள் வந்தால், ஒரே வகையிலான ஈர்ப்புத்தன்மையைக் கொண்ட அந்தக் காந்தப் புலங்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது.

 அது மின்கம்பிச் சுருளுக்குக் கடத்தப்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. வேறு சில மெட்டல் டிடெக்டர்களில், மின்கம்பிச் சுருள்கள் காந்தப் புலங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சுற்றுப்புறத்தில் உள்ள இயற்கையான காந்தப் புலத்தில் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கதவு நிலை வடிவத்தில் உள்ள மெட்டல் டிடெக்டர் அப்படித்தான் செயல்படுகிறது. அந்தக் கதவு நிலையில் தொடர்ச்சியான மின்கம்பிச் சுருள்கள் இருக்கும். அவை சுற்றுப்புற காந்த ஈர்ப்பில் ஏற்படும் மாறுபாடுகளைக் கவனித்து, அதற்கேற்ப எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றன.

இதைப்போல பூமிக்கு அடியில் மிகப் பெரிய காந்தப்புலம் இருக்கிறது. இது வடக்கு -தெற்காக இருக்கிறது.
Download As PDF

Friday, November 12, 2010

மொத்தம் எத்தனை பதிவுகள்

share

e-referrer

படிப்பவர்கள்

online counter

FeedBurner FeedCount

மேலே

Click to go to top
Click to comment

தொடர்பு கொள்ள

Map

flag counter

free counters

map

Photobucket