166 பேரைப் பலியெடுத்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் நடந்த இராண்டவது ஆண்டு நினைவு தினம் இன்று. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மும்பையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்ததப்பட்டது.
2008 நவம்பர் மாதம் 26ந் தேதி, மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்து பேர், நகரின் முககிய இடங்களில் நடத்திய கொலை வெறித் தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். பத்துத் தீவிரவாதிகளில் ஒன்பது பேர் படைகளின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட, ஒருவன் மடடும் உயிருடன் பிடிப்பட்டான். அவன் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மரணதண்டனை தீர்ப்பாகியுள்ளது.
இன்றைய இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தெற்கு மும்பையில் உள்ள போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். காவல்துறையினரால் பிரமாண்ட மரியாதை அணிவகுப்பும் நிகழ்தப்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்தில் பலியாகிய காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். கலங்கி நின்ற அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
தாக்குதலில் அதிகம் பேர் கொல்லப்பட்ட தாஜ் ஹோட்டல் பகுதியில், நேற்றிரவு முதலே பொது மக்கள் அஞ்சலி செலுத் தொடங்கியிருந்தனர். காலையில் மெழுகுவர்த்திகளை ஏற்றியும், மலரஞ்சலி சலுத்தியும் கொல்லப்படவர்களை நினைவு கூர்ந்தனர்.
டெல்லியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவு நாளில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு, அவர்கள் குடும்பத்தினர்க்கும் ஆறுதல் தெரிவிப்பதாகவும், அந்தத் துயர் மிகு நாட்களில் மும்பை மக்கள் காட்டிய தீரம், விவேகம், தைரியம், மன உறுதி, தியாகத்தை நாம் போற்றுவதாகவும், அதற்குத் தலைவணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் இச்சம்பவத்தில் பலியானவர்கள் நினைவு கூரப்பட்டார்கள். இத்தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்களில் அமெரிக்கர்கள் ஆறு பேரும் அடங்குவர். இது தொடர்பில் அமெரிக்க வெளியிறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியான சம்பவத்தை நினைவுகூரும் இந்த தருணத்தில் இந்தியாவின் சோகத்தில் நாங்கள் பங்கேற்கிறோம். எப்போதும் இந்தியாவுக்கு அமெரிக்கர்களின் ஆதரவு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment