மதுரையில் நடிகர் ரஜினியின் காரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர் ஒருவர் விபத்தில் பலியானார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், சினிமா தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி திருமணம் மதுரையில் நடந்தது.
இதில் திரையுலகை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினியும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்தார்.
பசுமைலை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ரஜினி, அங்கிருந்து திருமணத்துக்காக காரில் தமுக்கம் மைதானத்திற்கு புறப்பட்டார். அப்போது ரஜினியை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
ஓட்டலில் இருந்து வெளியே வந்த ரஜினியின் கார் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து ரசிகர்கள் சுமோ காரில் தொங்கியபடி அந்த காரை பின் தொடர்ந்தனர்.
பழங்காநத்தம் சிக்னல் அருகே வந்தபோது எதிரே வந்த டூ வீலருக்கு வழி கொடுப்பதற்காக சுமோ கார் வளைந்தபோது, தொங்கிக் கொண்டிருந்த மதுரை பந்தடி 8வது தெருவைச் சேர்ந்த மருந்து விற்பனையாளர் கார்த்திகேயன்(33) மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த அழகுபாண்டியன்(30) நெல்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ்மந்திரி(29) ஆகியோர் கீழே விழுந்தனர்.
0 comments:
Post a Comment