Widget By Devils Workshop
புதிய இடுகைகள் விரைவில் vanakkam

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text





என்னுடைய மற்ற தளங்கள்


1. கிரிக்கெட்


2. உடுமலைப்பேட்டை


3. மொபைல் ட்ரிக்ஸ்


4. தமிழ் தகவல்


5. இயற்பியல்


6. கோவை மண்டலம்


7. பாடல்

அனைவரையும்வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

Clipart

திருக்குறள்

Thursday, February 24, 2011

டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி : நள்ளிரவு முதல் காத்துக்கிடந்து ஏமாற்றம்



பெங்களூரு: கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் 2 வது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடக்கிறது. முதல் ‌போட்டியில் வங்கேதேசத்தை அபார வெற்றிக்கொண்ட இந்தியா 2 வது போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி க்கான டிக்கட் விற்பனை சின்னசாமி ஸ்டேடியத்தில் துவங்கியது.
டிக்கட் வாங்க ‌நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விற்பனை துவங்கிய சில மணிநேரத்தில் டிக்‌கட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதனால ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கவுன்டர் நோக்கி முன்னேறினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடி‌யடி நடத்தினர். இதில் பலர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனையடுத்து போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பரபரப்பு நிலவியது. பலர் அடிபட்டு ஓடுவது பரிதாபமாக இருந்தது.
இந்த மைதானத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கமுடியும். ஆனால் 4 ஆயிரம் டிக்கெட் மட்டும் விற்பனைக்கு வந்தன. இதனால் பலருக்கு கிடைக்காமல் போனது. ஏனைய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், பிளாக்கிலும் விற்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் போட்டி நடத்தும் கமிட்டி மீது உலக கோப்பை கிரிக்கெட் மத்திய கமிட்டிக்கு புகார் அனுப்பினர்.


--
S.BOOBALAN

http://boobalan-s.blogspot.com/





--
S.BOOBALAN

http://boobalan-s.blogspot.com/


Download As PDF

சென்னை


http://img.dinamalar.com/data/uploads/WR_386029.jpeg
--
S.BOOBALAN

http://boobalan-s.blogspot.com/


Download As PDF

Monday, February 7, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் - சர்வதேசத் தொடர்புகள்



ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ஆண்டிமுத்து ராசாவால் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று ஸ்வான் டெலிகாம் நிறுவனம்..!


இந்த நிறுவனச் செயல்பாடுகளால் பாகிஸ்தான், சீனா, மற்றும் மாபியா தலைவன் தாவூத் இப்ராஹிம் போன்றோரிடம் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு பல முனைகளில் இருந்தும் அச்சுறுத்துல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு ஏற்பட்ட 1.76 லட்சம் கோடி இழப்பு என்பது மட்டுமே தற்போதைய கேள்வியல்ல. இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை ஆகியவைதான் முக்கியமான கேள்வி. இதில் விசித்திரம் என்னவென்றால், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இவையனைத்தும் ஆரம்பம் முதலே தெரியும். இது குறித்த பல்வேறு காலக்கட்டங்களில் எதிர்ப்புகளைத் தெரிவித்தபோதும், ஆ.ராசாவின் கீழ் இருந்த தொலைத்தொடர்புத் துறை அனைத்துக்கும் ஒப்புதல் அளித்தது.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர மெனளத்தைக் கடைப்பிடித்து வந்தது ஏன்..? யாருடைய உத்தரவின்பேரில் இந்த அமைதி? தொலைத் தொடர்புத் துறை அலைக்கற்றை என்பது மதிப்புமிக்க அரிதான வளம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் பகைமை நாடுகளின் கைகளில் இந்த வளம் சென்றடையக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

கடந்த நான்கு பகுதிகளில் நாம் எழுதியிருக்கும் செய்திகளின் சாரம்சமும் இதுதான்..

இந்த அடிப்படையில் அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு மையம் என்ற அமைப்பு சார்பில் புதிதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை கடந்த 1-ம் தேதியன்று டெல்லியில் நடந்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

"அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களிடம் இருந்து அந்த உரிமங்களைப் பறிக்காதவரை, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கின்றன. அவை இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை.." என்று வழக்கறிஞர் பிரசாந்த்பூஷணும், சுப்பிரமணியன் சுவாமியும் வாதிட்டிருக்கிறார்கள்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, இந்நிறுவனங்கள் பற்றி கூடுதலான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி மார்ச் 1-ம் தேதி அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயர்களையும் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காகத் திரட்டி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களின் புகைப்படங்கள் இந்தப் பக்கங்களில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி வரும் டெல்லி பிரமுகர் ஒருவர் நம்மிடம் இது குறித்து விரிவாகப் பேசினார். "2-ஜி அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களின் மிக முக்கியமானது ஸ்வான். ரிலையன்ஸ் மற்றும் டைகர் டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்டதே இந்த ஸ்வான். இந்த நிறுவனத்தை அவர்கள் ஆரம்பித்துவிட்டு அதன் பிறகு பல்வா குரூப்புக்கு விற்பனை செய்துவிட்டார்கள். அவர்கள் டி.பி.ரியாலிட்டி என்று தங்களுக்கு புதிய பெயரைச் சூட்டிக் கொண்டார்கள்.

இந்த நிறுவனம் தன்னுடைய 45 சதவிகிதப் பங்குகளை துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எட்டிஸாலட் என்ற நிறுவனத்துக்கு விற்றது. 5.27 சதவிகிதப் பங்குகளை தமிழகத்தைச் சேர்ந்த ஜெனெக்ஸ் எக்ஸிம் என்ற நிறுவனத்துக்கு விற்றார்கள். இப்போது எட்டிஸாலட் என்ற நிறுவனம், டி.பி.டெலிகாம் என்ற பெயரில் இயங்குகிறது. வில்லங்கமே இந்த எட்டிஸாலட் அல்லது டி.பி.டெலிகாம் என்ற நிறுவனத்தில் இருந்துதான் தொடங்குகிறது.." என்ற பீடிகையுடன் அவர் ஆரம்பித்தார்.

"பாகிஸ்தான் நாட்டின் டெலிகம்யூனிகேஷன் துறையை பி.டி.சி.எல். என்பார்கள். இதன் மிக முக்கியமான பொறுப்பில் 10 பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஐந்து பேர் எட்டிஸாலட் நிறுவனத்திலும் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அதாவது 2-ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற எட்டிஸாலட் நிறுவனத்தின் பொறுப்பாளர்களுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்றே.." என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமானவர்கள்.

அப்துல் ரஹ்மான் அப்துல்லா அப்துர் ஹிப்ராஜிம் அலி நுரானி(Chairman And Chief Executive Officer)
 

அப்துல்லாஹ் அஹமது சலி அஹமது அலி சாவ்லே(Chief Humon Resources Officer)
 
 

ஃபாஹில் முகமது எர்ஹமா அலி அன்சாரி( Executive Vice President-Engineering)
 
 

 அப்துல்லாஹ் அகமத் ஓமர் தார்யம்(General Manager, Northern Emirates)

 

அகமத் அலி ஜார்வான் (General Manager, Real Estate)

ஆகிய ஐவர்தான் எட்டிஸாலட் நிறுவனத்தின் பொறுப்பிலும், பாகிஸ்தான் நாட்டின் அரசுத் துறையான டெலிகம்யூனிகேஷனிலும் இருக்கிறார்கள்.

இதனை ஒப்புக் கொண்டு பி.டி.சி.எல். தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் http://www.ptcl.com.pk/bod.php?pd_id=42 இவர்களது பெயர்களையும் இணைத்தே வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டுக்குத் தொலைத்தொடர்பு உரிமங்கள் தரப்பட்டுள்ளன என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவையில்லை. அப்படி தருவதாக இந்திய அரசாங்கத்தின் முடிவுக்கு ஃபாரின் இன்பர்மேஷன், பிரமோஷன் போர்டு என்று சொல்லப்படும் எஃஐ.பி.பி. எதிர்ப்புத் தெரிவித்ததா அல்லது ஆதரவு தெரிவித்ததா என்ற கேள்விகள் முக்கியமானது.

ஏனென்றால், இந்த அமைப்புக்குள் பிரதமர், நிதியமைச்சர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு முக்கிய மனிதர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் எப்படி இதனை அனுமதித்தார்கள்? யார் அவர்கள் கைகளைக் கட்டிப் போட்டது போன்ற ரகசியங்கள் இப்போது சுப்ரீம் கோர்ட் மூலமாக வெளியில் வரத்தான் போகிறது.." என்று பீதியைக் கிளப்புகிறார் அவர்.

ஸ்வான் நிறுவனத்தைத் தொடங்கிய பால்வா குரூப் பற்றி நாம் ஏற்கெனவே எழுதியிருக்கிறோம். இதன் சேர்மன் வினோத் கே.கோயங்கோ.

 

நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக இருப்பவர் சாஹித் யூ.பால்வா. இவர் மீது இந்திய உள்துறை அமைச்சகம் ஒரு கருப்பு கடிதத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.


இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக தாவூத் இப்ராஹிமை இணைத்துப் பேசிய கதையும் உண்டு. இந்த ஸ்வான் நிறுவனமும் எட்டிஸாலட்டும் இணைந்துதான் எட்டிஸாலட்-டி.பி.டெலிகாம் http://www.etisalat.ae என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பெயர் மாற்றமும் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதிதான் அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் முகமது உசேன் ஓம்ரான், அஹ்மத் பின் அலி, கலிபா அல் போராஹ், நசீன் பின் ஓபுத் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்கள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இதன் உறுப்பினராக இருக்கிறார்.

அந்தத் தமிழகப் பிரமுகரின் ஆதி அந்தங்கள் அனைத்தையும் இப்போதுதான் நாங்கள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்தத் தொழிலதிபரின் முக்கியமான வர்த்தகத் தொடர்புகள் தமிழகத்தில் காலூன்றி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய ஆட்சி மேலிடத்துக்கு மிக, மிக நெருக்கமான நபராகவும் இருக்கிறார். அதை வைத்துத்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டை இந்த நிறுவனம் வாங்கியிருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. இந்த ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரும்போதுதான் பணப் பரிவர்த்தனைகளின் அளவு வெளிச்சத்துக்கு வரும்.." என்ற சஸ்பென்ஸுடன் முடித்தார் அந்த டெல்லி பிரமுகர்.

- டெல்லி ஜூத்

நன்றி : ஜூனியர் விகடன்(09-02-2011)

மேற்கண்ட கட்டுரையின் இறுதிப் பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் சொல்லாத அந்தத் தமிழகப் பிரமுகரின் பெயர் "சையத் சலாவுதீன்." இவரைப் பற்றிய முழு தகவல்களும் அடங்கிய இன்னுமொரு கட்டுரை இது :

சலாவுதீனுக்கு வயது 68. துபாயில் வசிக்கும் இவரின் பூர்வீகம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஊரான கீழக்கரை. இவர் பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன.


"துபாயைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இ.டி.ஏ. அஸ்கான் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்தான் இந்த சலாவுதீன். இந்தியா, துபாய், சவூதி அரேபியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் உலக அளவில் சுமார் 20 நாடுகளில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் குழுமம் அது.

ரியல் எஸ்டேட், பல அடுக்குக் குடியிருப்புகள் கட்டுதல், கப்பல் போக்குவரத்து, ஏர்கண்டிஷன் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், பூமிக்கு கீழே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதில் மின் இயந்திரவியல் பயன்பாடு எனப் பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கும் நிறுவனங்கள் அந்தக் குழுமத்தில் உள்ளன. இப்படி 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சலாவுதீனின் கண் அசைவில் செயல்படுகின்றன.

25 ஆயிரம் கோடி அளவில் பணப் புழக்கம் உள்ளதாகச் சொல்லப்படும் நிறுவனங்கள் அவை. 60 ஆயிரம் தொழிலாளர்கள் இவற்றில் பணிபுரிகிறார்கள்!" என்று தமிழக தொழில் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

"சலாவுதீன் மிகுந்த புத்தி கூர்மை உள்ளவர். இந்திய அளவில் காங்கிரஸ், மாநில அளவில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டுபவர். பிரபல தொழிலதிபரான பி.எஸ்.அப்துர் ரஹ்மான் இவரை, துபாய்க்கு அழைத்துப் போனார். அங்கே தனது பிசினஸ் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். கிடைத்த வாய்ப்புகளை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அதிவேகமாக வளர்ந்து, அந்த கம்பெனிகளின் உச்ச பதவிவரை வளர்ந்தார். அதே நேரத்தில், தமிழகத்தில் இருந்து ஏழை-எளிய வீட்டு இளைஞர்களைத் துபாய்க்கு அழைத்து வேலை கொடுத்து ஊக்குவிக்கவும் செய்தார். இ.டி.ஏ. என்ற ஆங்கில வார்த்தையை 'எங்கும் தமிழ் ஆட்கள்' என்று விரிவாக்கம் செய்கிற அளவுக்கு தமிழர்களை பல மட்டத்துக்குக் கொண்டுபோனது இந்த நிறுவனம். இவரது கப்பல் கம்பெனிக்கும் தமிழக அரசியல் தலைவர்களின் குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாகக்கூட பேச்சுகள் உண்டு.

2000-ம் வாக்கில் இந்தியாவில் தனது பிசினஸை பிரம்மாண்டமாக விரிவாக்கினார் சலாவுதீன். தகவல் தொழில் நுட்பத் துறை கிடுகிடுவென வளர்ச்சி அடைந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, டெல்லி, சென்னை, பெங்களூரு நகரங்களில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் துறையில் முழு வீச்சில் கால் பதித்தார். துபாய்க்கும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில முக்கிய அரசியல் வி.ஐ.பி-களுக்கும் ஒரு பாலமாகவே இவரது நிறுவனங்கள் உதவுவதால், இந்த நிறுவனங்களின் வளர்ச்சியும் தங்கு தடையில்லாமல் உள்ளது!" என்று சொல்லி முடித்தனர்.

"பிரபல தொழிலதிபரான சலாவுதீனுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும் என்று ஐயப்படுகிறீர்கள்..?" என்று டெல்லியில் உள்ள வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

"ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு டெண்டர் விடப்படுவதற்கு முன்பு, இங்கே குறைவான விலைக்கு வாங்கி, வெளிநாட்டு கம்பெனிக்குக் கூடுதல் விலைக்கு விற்க சிலர் திட்டம் போட்டனர். அந்த வகையில், 6000 கோடி அளவில் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆதாரங்கள் எங்களுக்குச் சிக்கியுள்ளன. இதில் தொடர்புடையவர்களைக் கண்காணித்த போது அவர்கள் வசமிருந்து கிடைத்த சில தகவல்கள், சலாவுதீனின் நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்க எங்களைத் தூண்டின.

மேலும் விசாரணையில், 'மும்பையில் நரிமன் பாயின்ட்' ஏரியாவில் மிகப் பெரிய கட்டடத்தின் மாடியில் ஒரு நிறுவனத்தை திடீரென ஆரம்பித்துள்ளனர். இதே நிறுவனத்தை ஏனோ திடீரென்று ஸ்வான் டெலிகாம் என்று பெயர் மாற்றம் செய்து, அதன் பெயரில் சுமார் 1500 கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை டெண்டரில் எடுத்தனர். இந்த கம்பெனிக்கு வங்கி கேரன்டி கொடுத்தது, துபாயில் இயங்கும் கப்பல் போக்குவரத்து கம்பெனி ஒன்று என்று தகவல் கிடைத்தது.

மிகக் குறுகிய காலத்தில், ஸ்வான் கம்பெனி பெற்ற அலைவரிசை ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை எடிஸலாட் என்கிற துபாய் நாட்டு டெலிகாம் கம்பெனிக்கு விற்றுள்ளனர். இதில்தான் 4500 ஆயிரம் கோடி அளவுக்கு லாபம் பார்த்துள்ளனர்.

'மும்பையில் இயங்கிய கம்பெனியின் பங்குதாரர்கள் யார்? அவர்களுக்கும் சலாவுதீன் தொடர்பான சிலருக்கும் ஏதாவது பழக்க வழக்கம் உண்டா? துபாயில் உள்ள கப்பல் கம்பெனி யாருடையது?' இப்படியான பல கேள்விகளுக்குப் பதில் தேடி வருகிறோம். இந்த கம்பெனி இருந்த அதே கட்டடத்தில் தமிழகப் பிரமுகர்கள் சிலர் அங்கம் வகிக்கும் இரண்டு கம்பெனிகள் உள்ளன. அதைப் பற்றியும் விசாரித்து வருகிறோம்!" என்று விளக்கமாகச் சொன்னார் அந்த உயர் அதிகாரி.

தொழிலதிபர் சலாவுதீனின் பின்னணி பற்றி தமிழகத் தொழிலதிபர்கள் சிலரிடம் கேட்டபோது, 2007-ம் ஆண்டுத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இடம் பெற்று உள்ள புகைப்படத்தைச் சுட்டிக் காட்டினார்கள்.

தொடர்ந்து, "இது, தொழிலதிபர் சலாவுதீனின் கம்பெனியும் டிட்கோவும் கூட்டாக சேர்ந்து 3,750 கோடி மதிப்பீட்டில் டவுன்ஷிப் ஒன்றை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியுடன் கையொப்பம் இட்டபோது எடுத்த படம்!

இதுபோலவே, தமிழக அரசு கொண்டு வந்த ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம், சென்னை அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டடம்., இரண்டின் பின்னணியிலும் சலாவுதீன் தொடர்பானவர்களின் பங்கு உண்டு.  மெட்ரோ ரயில் திட்டத்தில் பூமிக்குக் கீழே பாதை அமைக்கப்படும்போது, முக்கியப் பணிகளுக்கான கான்ட்ராக்ட்டும் சலாவூதினின் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.." என்கிறார்கள்.

இதற்கிடையே, 'தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் மற்றும் பல்துறை வி.ஐ.பி-க்கள் யார் யார் சமீப காலத்தில் அடிக்கடி துபாய் சென்று வந்தார்கள்? அங்கே யாரையெல்லாம் சந்தித்தார்கள்?' என்கிற உள் விஷயங்களை எல்லாம் மொட்டை பெட்டிஷன்களாகத் தட்டிவிடத் தொடங்கி உள்ளார்களாம் சிலர்.

அன்று ஜெ. சொன்னது!

கடந்த ஜூலை 13-ம் தேதியன்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, "ஸ்டார் இன்ஷூரன்ஸ் என்கிற நிறுவனம், துபாயை தலைமையிடமாகக் கொண்ட, இ.டி.எ. ஸ்டார் குரூப் என்ற மிகப் பெரிய, சர்வதேச நிறுவனத்தைச் சார்ந்ததாகும். இதன் தலைமையிடம்தான் துபாய். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான், இதை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த இ.டி.எ. குழுமம்தான், 700 கோடி மதிப்பிலான புதிய தலைமைச் செயலக வளாகத்தை கட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்தக் குழுமத்தினுடைய மற்றொரு நிறுவனம்தான், ஜெனிக்ஸ் எக்சிம். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், ஆ.ராசாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கோடிக்கு மேல், இழப்பை ஏற்படுத்திய, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனத்துக்குப் பங்கு உண்டு. ஸ்வான் நிறுவனத்தின் 5.27 சதவிகிதப் பங்குகளை இந்த ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனம்தான் வாங்கியுள்ளது.

1970-களிலிருந்து, கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்புள்ளது இ.டி.எ.குழுமம். இந்தக் குழுமத்தைச் சேர்ந்ததுதான், கிரசென்ட் ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு போட்டியாக, தனது மகன் மு.க.முத்துவை வைத்து, கருணாநிதியால் தயாரிக்கப்பட்ட, 'பிள்ளையோ பிள்ளை' என்ற திரைப்படத்தை, வெளியிட்டது இந்த கிரசென்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான்! பல்வேறு திட்டங்களின் கீழ், ஸ்டார் குழுமத்துக்கு கொடுக்கப்படும் அரசுப் பணம், அதாவது உங்கள் பணம், துபாயில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையிடத்துக்குச் செல்கிறது!" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

- இந்தக் கட்டுரையும் ஒரு மாதத்திற்கு முன்பு இதே ஜூனியர் விகடனில்தான் வெளியாகியிருந்தது.. அப்போது சலாவுதீனின் பெயரை வெளியிட்டு, அவரது ஜாதகத்தையே இப்படி பிட்டு, பிட்டு வைத்திருக்கும் ஜூனியர் விகடன், இந்த வாரம் பெயர் குறிப்பிடாமல் சொல்வதன் அர்த்தம் என்ன என்றுதான் எனக்குத் தெரியவில்லை..?!

S.BOOBALAN

http://boobalan-s.blogspot.com/


Download As PDF

Wednesday, February 2, 2011

திருப்பரங்குன்றம்

http://img.dinamalar.com/data/uploads/WR_238537.jpeg
Download As PDF

தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்துங்கள் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை


 
Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update

புதுடெல்லி : தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை  தடுத்து  நிறுத்தாவிட்டால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் என்று இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இலங்கை கடற்படையால் 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இப்பிரச்னையில் தலையிட்டு, இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ், கொழும்பு சென்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு விவரம் பற்றி டெல்லியில் முதல்வர் கருணாநிதியிடம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் நேற்று விளக்கினர். சந்திப்பின் போது, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் உடனிருந்தார்.  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குவதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணாவிடம் கருணாநிதி வலியுறுத்தினார்.

பின்னர், நிருபர்களிடம் கிருஷ்ணா கூறியதாவது:  இந்திய மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மீனவர்களை கொல்வது எக்காலத்திலும் ஏற்கப்படாதது. இப்பிரச்னையில் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும். பாகிஸ்தான் உள்பட எந்த நாடுமே எல்லை தாண்டும் மீனவர்களை தாக்குவதில்லை என்பதை இலங்கையிடம் சுட்டிக் காட்டி யுள்ளோம். இந்தியாவின் கவலையை ராஜபக்சேயிடம் உணர்த்தியுள்ளோம். மீனவர் கொல்லப் பட்ட சம்பவம் பற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.

மீனவர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் மீன்பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக இருநாடுகளும் இணைந்து அறிக்கை விடுத்துள்ளன. மேலும், இருநாட்டு கூட்டுக் குழுவின் கூட்டத்தை இம்மாதம் 15ம் தேதியையொட்டி நடத்தி, இப்பிரச்னை குறித்து விவாதிக்குமாறு வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்தார்.



http://boobalan-s.blogspot.com/


Download As PDF

Tuesday, February 1, 2011

இன்றைய புகைப்படங்கள்




இதாவது உறைக்குமா? முகமூடி எதற்கு? சாயமின்றி ஓய்வு! நாடும் அரசியலும்போல்! இயற்கையின் பரிசு!



         
   

http://boobalan-s.blogspot.com/


Download As PDF

நல்லவேளை தமிழ்தான்!



வாரும் வே வாரும்... நல்லா இருக்கியளா? நம்ம சந்திப்ப பத்தி நீரா ரேடியோல பேசினீரு? கேட்டுட்டிருந்தேன்...(என்னது... நமக்குத் தெரியாம எப்படி? அப்பா... நீரா ராடியாங்கறாரே... என்ன நடந்திருக்கும்?!)ஆமா ஆமா... தலைநகருக்கு வந்திருக்கீங்க. உங்க புகழ் இங்கயும் கொடி பறக்க வேணாமா? அதான்...சரி... நம்ம வழக்கமான விஷயத்த பேசுவோம்! மாநில காங்கிரஸுல இருந்து மக்கள் எல்லாம் அணி அணியா வந்துட்டுப் போனாங்களா? என்ன என்ன அடி போடறாங்க?அத என்னங்க... நாமே தெளிவா பேசிடுவோம்.. (நல்ல வேளை இவருக்கு தமிழ் தெரியுது. தெளிவா தமிழ்லயே பேசிடலாம். ஏற்கெனவே நமக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் வராதுன்னு துபாஷியா இருக்கற பொண்ணுல ஆரமிச்சி இவங்க எல்லாம் என்னமா பூந்து வெளயாடிட்டாங்க?! எதெல்லாமோ படிச்சோமே! ஒழுங்கா இவங்கள மாதிரி அடுத்தவங்களுக்கு தெரியாம நாமும் சைக்கிள் கேப்புல ஹிந்தி படிச்சிருக்கணும். ஹூம்! இப்ப யோசிச்சி என்ன செய்யறது?)


http://boobalan-s.blogspot.com/


Download As PDF

தமிழகம் முழுக்க ரேஷன் கடைகளில் இன்று முதல் பருப்பு, பாமாயில் விலை குறைப்பு



Tamil news paper, Tamil daily news 
paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political 
news, business news, financial news, sports news, today news, India 
news, world news, daily news update சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் விலை குறைப்பு இன்று (செவ்வாய்கிழமை) அமலுக்கு வந்தது. இதன்மூலம், 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். கண்காணிக்க மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆன்லைன் வர்த்தகம், பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

 இந்த விலையேற்றத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் விற்பனை செய்யும் திட்டத்தை அரசு 2009ம் ஆண்டு முதல் செயல்படுத்தியது. அதாவது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ரூ.40க்கும், பாமாயில் லிட்டர் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் கருணாநிதி உயர் அதிகாரிகளுடன் கோட்டையில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் விலையை குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ரூ.40க்கு விற்கப்படும் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.10 குறைத்து ரூ.30க்கும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 என்பதில் இருந்து ரூ.5 குறைத்து ரூ.25க்கும் விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்த விலை குறைப்பு பிப்ரவரி 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று(செவ்வாய்கிழமை) இத்திட்டம் அமலுக்கு வந்தது. மாவட்டந்தோறும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று காலை முதல் இப்பொருட்கள் வழங்கப்பட்டன. கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர்.  இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு அறிவித்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை குறைப்பு பற்றி அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள பொருட்களை தர மறுக்கும் ரேஷன் கடைகளை கண்காணிக்கும் வகையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக 27 ஆயிரம் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 5 ஆயிரம் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்பு மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.400 கோடி செலவு ஏற்படும். இவ்வாறு அவர்
கூறினார்.

வெளிமார்க்கெட்டில் விலை 2.5 மடங்கு அதிகம்

வெளி மார்க்கெட்டில் துவரம் பருப்பு கிலோ ரூ.78 முதல் ரூ.80 வரையும், உளுந்தம் பருப்பு ரூ.70 முதல் ரூ.75 வரையும் விற்கப்படுகிறது.  பாமாயில் லிட்டர் ரூ.59க்கு விற்பனையாகிறது. அதாவது, ரேஷன் கடைகளை விட  வெளி மார்க்கெட்டில் இரண்டரை மடங்கு விலை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Download As PDF

பேசும் படம்

http://img.dinamalar.com/data/uploads/WR_193273.jpeg
Download As PDF

மொத்தம் எத்தனை பதிவுகள்

share

e-referrer

படிப்பவர்கள்

online counter

FeedBurner FeedCount

மேலே

Click to go to top
Click to comment

தொடர்பு கொள்ள

Map

flag counter

free counters

map

Photobucket