வாரும் வே வாரும்... நல்லா இருக்கியளா? நம்ம சந்திப்ப பத்தி நீரா ரேடியோல பேசினீரு? கேட்டுட்டிருந்தேன்...(என்னது... நமக்குத் தெரியாம எப்படி? அப்பா... நீரா ராடியாங்கறாரே... என்ன நடந்திருக்கும்?!)ஆமா ஆமா... தலைநகருக்கு வந்திருக்கீங்க. உங்க புகழ் இங்கயும் கொடி பறக்க வேணாமா? அதான்...சரி... நம்ம வழக்கமான விஷயத்த பேசுவோம்! மாநில காங்கிரஸுல இருந்து மக்கள் எல்லாம் அணி அணியா வந்துட்டுப் போனாங்களா? என்ன என்ன அடி போடறாங்க?அத என்னங்க... நாமே தெளிவா பேசிடுவோம்.. (நல்ல வேளை இவருக்கு தமிழ் தெரியுது. தெளிவா தமிழ்லயே பேசிடலாம். ஏற்கெனவே நமக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் வராதுன்னு துபாஷியா இருக்கற பொண்ணுல ஆரமிச்சி இவங்க எல்லாம் என்னமா பூந்து வெளயாடிட்டாங்க?! எதெல்லாமோ படிச்சோமே! ஒழுங்கா இவங்கள மாதிரி அடுத்தவங்களுக்கு தெரியாம நாமும் சைக்கிள் கேப்புல ஹிந்தி படிச்சிருக்கணும். ஹூம்! இப்ப யோசிச்சி என்ன செய்யறது?)
http://boobalan-s.blogspot.com/
Download As PDF
0 comments:
Post a Comment