Wi-Fi தொழில்நுட்பத்தை விஞ்சும் 100 மடங்கு வேகம் கொண்ட புதிய தொழில்நுட்பம் Li-Fi இனைய பாவனை அடுத்தகட்டத்துக்கு தயார்.
LED மின்குமிழ்களின் ஒளி மூலம் சமிஞ்சைகளை கடத்தி அதி வேக இணைய இணைப்பை
ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம் மூலம் இனைய பாவனையை அடுத்தகட்டத்துக்கு
எடுத்து செல்ல தயார்.
இணையத்தள இணைப்பை வயர் இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘WiFi’ என்ற
தொழில்நுட்பம் உள்ளது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை வயர் இணைப்பு
இல்லாமல் கணணி, செல்போன், மடிக்கணணி, லேப்லெட் போன்ற சாதனங்களில் இணையத்தள
வசதிகளை பெற முடியும்.
ஆனாலும் ‘WiFi’ மூலம் தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு கஷ்டமாக இருக்கும்.
தற்போது WiFi வை விட 100 மடங்கு வேகம் கொண்ட தொழில்நுட்பத்தை எஸ்டோனியா
நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதற்கு ‘LiFi’ என்று
பெயரிடப்பட்டுள்ளது.
WiFi இல் 1 ஜி.பி. தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ
அதை விட 100 இல் 1 மடங்குதான் LiFi நேரம் எடுத்துக் கொள்கிறது. தகவல்
தொழில் நுட்பத்தில் LiFi புதிய புரட்சியை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
- A.D.ஷான் -
Download As PDF
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பாக்டீரியாவுக்கு ஏவுகணை நாயகன், மக்கள் குடியரசுத் தலைவர் என் போற்றப்படும் அப்துல்கலாம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளியில் சர்வதேச ஆய்வகம் அமைத்துள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில் இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
வேற்றுகிரகத்தில் வாழும் உயிரினங்கள் உள்ளனவா என்று கண்டறியும் நாசா விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி வெங்கடேசன் என்பவர் தலைமை வகிக்கிறார் . இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தம் குழுவினர் கண்டுபிடித்த பாக்டீரியாவுக்கு கலாம் அவர்களின் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: வேற்றுகிரகத்தில், வாழும் உயிரினங்கள் உள்ளனவா என கண்டறிவது தான் எங்களது குழுவின் நோக்கம். அதன்படி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியா ஒன்றிற்கு கலாம் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'சோலிபாசிலஸ் கலாமி' என்று அந்த பாக்டீரியாவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா காமா கதிர்வீச்சை தாங்கக்கூடியது மேலும் மக்களுக்கு பயன்படக் கூடியது என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் பொதுவாக எந்த ஊரில் ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படுகிறதோ அந்த ஊரின் பெயரை சேர்த்து அந்த பொருளுக்கு வைப்பது வழக்கம். ஆனால் அப்துல்கலாம் அவர்கள் மீது கொண்ட மரியாதை காரணமாகவும், அவரது அறிவியல் எண்ணங்களின் மீது கொண்ட வியப்பு காரணமாகவும் அவரது பெயரை சூட்ட வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். கலாமின் அறிவியல் பின்னணி காரணமாக இதனை பரிசீலித்த நாசாவும் அவரின் பெயரை சூட்ட ஒப்புதல் அளித்துள்ளது பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Download As PDF