மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள் கண்ணாடி அறையில் 12ம் பாசுரத்தின்படி ராவண வதம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
-
பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு இந்தாண்டுக்கான சிறந்த இந்தியன் விருது வழங்கப்பட்டது. இதை, பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சுசில் குமார் மோடி வழங்கினார்.
-
காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி, மேற்கு மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் பெர்காம்பூரில், 900 கி.மீ., சைக்கிள் பேரணியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சைக்கிள் ஓட்டி துவக்கி வைத்தார்.
-
தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி, காங்கிரஸ் எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் ஐதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கோல்கட்டாவில் அம்மாநில கவர்னருடன் நடந்த முக்கிய கூட்டத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார், கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
-
2ஜி ஸ்டேக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசின் நிலைக் குறித்து பார்லிமென்டில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில், பா.ஜ வின் மூத்த தலைவரும், பொது கணக்கு குழுத் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி விளக்கமளித்தார்.
-
பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் தேசிய சிறார் அறிவியல் மாநாட்டை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். உடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேசன்.
-
எலவனாசூர்கோட்டையில் பயனாளிகளுக்கு அமைச்சர் பொன்முடி இலவச கலர் டிவி வழங்கினார். அருகில் கலெக்டர் பழனிசாமி.
-
கள்ளிமந்தையத்தில் நடந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்,ஆர்.கே.பன்னீர்செல்வம் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர். அரசு கொறடா சக்கரபாணி, கலெக்டர் வள்ளலார்.
-
சென்னை வந்த மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சென்னை அருகே உள்ள முதலைப் பண்ணைக்கு வந்து பார்வையிட்டார்.
-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ., ராமன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
0 comments:
Post a Comment