பெரிய கோயில் சிற்பங்கள் - தஞ்சாவூர் - 1
நெல்லால் மட்டுமல்ல. கல்லாலும் சிறந்த ஊர், தஞ்சாவூர். பெரிய கோயில், தஞ்சை சிற்பவளத்துக்குச் சிறந்த சாட்சி. கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான ஈர்ப்பைத் தருகின்றன சிற்பங்கள். பெரிய கோயில் பற்றி ஏற்கனவே எழுதியாயிற்று. எத்தனை முறை சென்றாலும் அத்தனை அனுபவங்களையும் பதிவு செய்து விட வேண்டும் என்ற ஆவலே பதிவின் நோக்கம்.
கோயிலின் பிரதான வாயிலைச் சுற்றி அகழி உள்ளது. கல்லணையிலிருந்து அகழிக்குத் தண்ணீர் வருகிறது. விமானக் கலசத்தின் நிழல் தரையில் விழாத வடிவமைப்பு ஒன்றே தஞ்சை சிற்பக்கலைக்குச் சான்று. கோயிலின் முதல் தளத்தில் 108 வகை நடன அமைப்புகளின் சிற்பங்கள் உள்ளன. முன்னால் உள்ள நந்தி ஒரே கல்லால் ஆனது. கோயிலின் சுற்றுச் சுவர்களில் 10 ஆம் நூற்றாண்டு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
அகழியைக் கடந்ததும் தென்படும் கோபுரத்துக்குக் “கேரளாந்தகன் திருவாயில்” என்று பெயர். இராஜராஜ சோழனின் பெயர்களில் ஒன்று. இந்தக் கோபுரத்தில், இலக்கிய, புராண நிகழ்வுகள் சிற்பங்களாக வடிக்கப்பெற்றுள்ளன. அடுத்தது நந்தி மண்டபம். 11 அடி உயரமுள்ளது. பிற்காலத்தில் நாயக்கர்களால் நிறுவப்பட்ட நந்தி. இராஜராஜன் நிறுவிய நந்தி, கோயிலின் தெற்குத் திருச்சுற்று மாளிகையில் உள்ளது.
கோயிலின் முன்மண்டபத்தை ஒட்டிய மகாமண்டபத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிலை உள்ளது. இவை மாமன்னன் இராஜராஜனைப் போன்று அமைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு எழுதினாலும், இந்தச் சிற்ப அற்புதத்தை விவரிக்கப் போதுமானதாக இல்லை! இன்னும் செய்திகளும், படங்களும் அடுத்த பதிவில். கருத்துக்களை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்.

பெரிய கோயில் சிற்பங்கள் - 2
பெரிய கோயில் சிற்பங்கள் -1 என்ற பதிவின் தொடர்ச்சி. ஆலயத்துள் நுழைந்ததும், பெரிய தூண்கள் வரிசையாக அமைந்திருப்பதைக் காணலாம். தூண்களின் மீது குறுக்குக் கற்கள் வைத்துக் கூரை எழுப்பப்பட்டுள்ளது. கோடையின் கொடுமை எவ்வளவு இருந்தாலும் கோயிலுக்குள் குளிர்ச்சி நடமாடுகிறது. மகாமண்டபத்தின் இருபுறமும் உலோகச் சிலைகள் உள்ளன.
மகாமண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே இருப்பது அர்த்த மண்டபம். இது திருமஞ்சன அறையாகவும் அந்த நாட்களில் பயன்பட்டிருக்க வேண்டும். அர்த்த மண்டபத்தின் வடக்கு, தெற்குப் புறங்களில் இருக்கும் வாயில்கள் வழியாகவும் உள்ளே வரலாம். கோவிலின் தாங்குதளம் மிக உயரமாக இருப்பதால் அர்த்த மண்டபமும் கருவறையும் தரைமட்டத்திற்கு 20 அடி உயரத்தில் இருக்கின்றன.
எனவே தெற்கு, வடக்கு வாயில்களைச் சென்றடைய இரு நிலைகளில் உள்ள படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். படிகளின் பிடிச்சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருகின்றன. இரு வாயில்களிலும் காவலர் சிலைகள் காணப்படுகின்றன.

தெற்குப்புறம் இருக்கும் வாயின் மேல் “விக்கிரம சோழன் திருவாசல்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்களை மறைத்துக் கொண்டு இப்போது ஒரு மின் விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. வடக்குப்புறம் இருக்கும் வாயில் அரசனின் மாளிகைக்கு அருகே இருந்ததால் அணுக்கன் திருவாயில் என்று அழைக்கப்பட்டது.
கோவிலின் முக்கிய பகுதி, முழுக்கோவிலுமே ஒரு தனித்தன்மையையும் ஒரு வடிவத்தையும் பெறும் பகுதி, கோவிலின் விமானமதான். விமானத்தின் 13 நிலைகளிலும் சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இது கங்கை கொண்ட சோழபுரம் கோவில் போன்று உள் வாங்காமல் ஒரே நேர்ச்சரிவில் அமைந்திருக்கிறது.

இது அந்தக் கால கட்டத்தில் தங்களிடமிருந்த சாதனங்களைக் கொண்டு தமிழர்களால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த பொறியியல் சாதனை. பிற்காலத்தில் வந்த அரசுகளின் தீய எண்ணங்களுக்கும், ஆங்கில பிரஞ்சு ஆதிக்கத்தின் போது கோவிலின் வளாகம் வேறு தவறான காரியங்களுக்கு உட்பட்டிருந்தபோதும், எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்பது தமிழ் நாட்டுக் கலைஞர்களின் திறமைக்குப் பெரும் சான்று.
இத்தனைப் பொருட்செலவில், மனித உழைப்பில் பொறியியல் சாதனை படைத்துக் காட்டிய மாமன்னன் இராஜராஜனின் இறையுணர்வும், கலையுணர்வும் போற்றுதற்குரியவை.