Firefox தமிழில்..!
Firefox இப்போது தமிழில்! இணைய உலவி, முதற்பக்கம் உட்படப் பெரும்பாலான பக்கங்கள் 70 மொழிகளில் கிடைக்கின்றன. Windows, Linux & MAC OS பயனாளர்களுக்குக் கிடைக்கிறது. இலங்கைத் தமிழ், தமிழ் என்ற இரு பிரிவுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்ய:
பக்கத்திற்குச் சென்று உங்கள் விருப்பமொழியைத் தேர்வுசெய்து கொள்ளவும். Version 3.5.1 நான் இன்னும் பயன்படுத்தவில்லை. பயன்படுத்துபவர்கள் தங்கள் அனுபவத்தைப் பதிவு செய்யலாம். இதற்காக உழைத்த, உலகெங்கும் உள்ள பங்களிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.