Widget By Devils Workshop
புதிய இடுகைகள் விரைவில் vanakkam

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text





என்னுடைய மற்ற தளங்கள்


1. கிரிக்கெட்


2. உடுமலைப்பேட்டை


3. மொபைல் ட்ரிக்ஸ்


4. தமிழ் தகவல்


5. இயற்பியல்


6. கோவை மண்டலம்


7. பாடல்

அனைவரையும்வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

Clipart

திருக்குறள்

Sunday, August 15, 2010

திருச்சி

மலைக்கோட்டை

உச்சிப்பிள்ளையார்
கோயில் அல்லது தாயுமானவப் பெருமாள் கோயில் என்று அழைக்கப் பெறும்
இக்கோயில், திறமையான திராவிடக் கட்டடக் கலைக்கு உத்தமமான உதாரணம்.
உச்சிப்பிள்ளையார் கோயில், இரண்டு கோயில்களின் சங்கமம். அவை, விநாயகர்
மற்றும் சிவன் கோயில்கள். காலம் 7 ஆம் நூற்றாண்டு. 83 மீட்டர் உயரத்தில்
உள்ள பழைமையான பாறைகளால் ஆனது. பாறைகள், 3 மில்லியன் காலத்திற்கு
முற்பட்டது. விஜயநகரப் பேரரசு மற்றும் ஆங்கிலேயப் பேரரசால் போர்க்
காலங்களில் ராணுவப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
தலப்புராணம்:


ராவணனை
வெல்ல பேருதவி புரிந்த விபீஷணனுக்கு, ராமன், ரங்கநாதர் விக்கிரகத்தைப்
பரிசளிக்கிறார். அசுர குலத்தைச் சேர்ந்த விபீஷணன், ரங்கநாதர் விக்கிரகத்தை
இலங்கை கொண்டு செல்வதை விரும்பாத தேவர்கள், விநாயகனின் உதவியை
நாடுகின்றனர்.
விபீஷணன்,
ஈமக்கடன்களைக் காவிரியாற்றில் செலுத்த வேண்டியிருந்தது. சிலையினை கீழே
வைத்துவிட்டால், மீண்டும் எடுக்க இயலாது; பிரதிஷ்டையாகிவிடும். எனவே, தான்
கடன்களைச் செலுத்தும்வரை , சிலையினைக் கீழே வைத்துவிடாமல்
பார்த்துக்கொள்ளும்படி அங்கு வந்த சிறுவனிடம் கோரினார். நீரில்
முழுவதுமாய் அமிழ்ந்திருந்தபோது , சிறுவன் சிலையினைக் கீழே
வைத்துவிட்டதைக் கண்டு வெகுண்டார். சிறுவனைத் துரத்தி , அவனது நெற்றியில்
அடித்தபோது, வந்த சிறுவன் விநாயகன் என்றறிந்து வணங்கி இலங்கை
சென்றார். சிலை, நீண்ட காலத்திற்கு அக்காட்டுப்பகுதியிலேயே இருந்தது.
பறவையைத் தேடி வந்த சோழ மன்னனால் கண்டெடுக்கப்பட்டது. இவைபோல் இன்னும் சில
புராணங்களும் சொல்லப்படுகின்றன.
அனுதினமும்,
ஆறுகாலப் பூஜை நடைபெறுகிறது. வருடப் ப்ரம்மோற்சவம், சித்திரை தோறும்
சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப் பூரம் மற்றும் பங்குனி மாதத் தெப்ப
உற்சவம் ஆகியவை குறிப்பிட வேண்டிய விழாக்கள்.பல்லவர்களால், முதலில்
ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் , மதுரை நாயக்கர்களால் விஜயநகரப்
பேரரசு காலத்தில் முடிக்கப்பட்டன.


திருச்சி மாநகரம், கர்வம் கொள்வதற்கு உயரமான காரணம், உச்சிப்பிள்ளையார் கோயில்.



திருவானைக்காவல்

ஐம்பூதங்களுள் நீர்த்தலம். இறைவன் ஜம்புகேசுவரர், இறைவி அகிலாண்டேசுவரி அம்மன். ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னால் கோச்செங்கட்சோழ மன்னரால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் முதல் சைவத்தின் பெரும்பாலான நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம்.திருவானைக்கா என்னும் இத்தலம், ஜம்புகேசுவரம், ஞானபூமி, ஞானத்தலம், அமுதேசுவரம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

கோவிலின் அமைப்பு:
2500 அடி நீளமும், 1500 அடி அகலமும், உள்ளிருந்து வெளி வீதி வரையில் ஐந்து திருச்சுற்றுக்களை உடையது. 4 மற்றும் 5 ஆவது திருச்சுற்றுக்களில் வீடுகள் அமைந்துள்ளன. 4 ஆவது திருச்சுற்றில் திருவிழாக் காலங்களில் திருவுலாத் திருமேனிகள் புறப்பாடும், தேரோட்டமும் நடைபெறும். சூழ்ந்துள்ள பல மதில்களில் 5 ஆம் திருச்சுற்றாகிய வீபூதித் திருச்சுற்று மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. தலத்துப் பெருமானைத் தரிசிப்பதற்காகவே அரங்கநாதர் திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பதாக கஜாரண்ய ஷேத்திர மகாத்மியம் குறிப்பிடுகிறது. (அரியா, சிவனா என வாதத்தில் ஈடுபடுவோர் கவனிக்க!)
சிற்பச் சிறப்புகள்:
அகிலாண்ட நாயகியின் திருவுருவுக்கு அடுத்ததாய்ச் சிறந்த சிற்பம், தென்மேற்கு மூலையில் உள்ள வல்லப கணபதியின் சிற்பம். மூன்றாம் திருச்சுற்றில் கீழ்ப்புறமுள்ள நாலுகால் மண்டபத்தில் நடமாடும் நங்கையர், குறிசொல்லும் குறத்திச் சிற்பங்கள் அற்புதமானவை. ஆயிரங்கால் மண்டபம், தட்சிணாமூர்த்திச் சிற்பம், சுந்தரபாண்டியன் கோபுரமும் எழிலானவை. அகிலாண்டநாயகி கோயிலின் கீழே அமைக்கப்பெற்றுள்ள நெற்களஞ்சியம் , அறிவியல்ரீதியாக தானியம் சேமிக்கும் இன்றைய முறைகள் பலவற்றுக்கு முன்னோடி.
கோச்செங்கண்ணான்:
முற்பிறவியில் சிலந்தியாயிருந்து ஜம்புகேஸ்வரரை வழிபட்டவன், மறுபிறவியில் கோச்செங்கட்சோழனாய்ப் பிறந்தான். 70 சிவன் கோயில்களைக் கட்டினான். முதலில் கட்டிய கோயில் , திருவானைக்கா. ஆலயத்தில் திருச்சாலக் கண்டிகை மண்டபம், கோபுரம், தந்தி (யானை) புகாத வாயில், மாடவீதி, பதினெட்டு சைவ மடங்கள், எட்டுத்திக்கிலும் இருக்கும் இடபக்கொடி மரங்கள் முதலியவற்றை நிறுவினான்.
கல்வெட்டுக்கள் சொல்பவை:
இதுவரை 2 ஆவது 3 ஆவது மற்றும் 4 ஆவது திருச்சுற்றுக்களிலும், அம்மன் கோவிலிலும் சுமார் 40 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் அவ்வப்போது நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன.
1. முற்காலத்தில் இப்பிரதேசம் தென்கரைப் பாண்டி குலாசனி வளநாடென்று வழங்கியதும், சோழ, பாண்டிய , கொய்சால மன்னர்கள் வெவ்வேறு காலங்களில் ஆட்சி புரிந்ததும் தெரியவருகிறது.
2. ஆசுகவியில் வல்லமை பெற்ற காளமேகப் புலவர், இத்தலத்தில் அம்பிகையின் அருள் பெற்றார். வறுமையிருந்த புலவருக்கு சாளுவ மன்னன் திருமலைராயன் (கி.பி 1450 - 1480) மிகுந்த செல்வம் தந்து காத்ததைப் புலவர் தமது பாடலில் குறிப்பிடுகிறார்.
3. ஜடாவர்மன் சுந்தரபாண்டிய தேவன் (கி.பி 1251 - 1264), மாறவர்மன் குலசேகர தேவன் (கி.பி 1278) காலத்திலும், காகத்திய மன்னனான பிரதாப ருத்திரதேவன் காலத்திலும் நிலங்கள் தானம் செய்யப்பட்ட குறிப்புகள் உள்ளன.
இவைபோன்ற இன்னும் பல்வேறு செய்திகள் கல்வெட்டுக்களின் வாயிலாக அறிய முடிகிறது.

நால்வர் பாடிய சிறப்பு:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்ற தலம். பதிகங்களால் பக்தியையும்,தமிழையும் ஒருசேர வளர்த்த மேதைகள்.
ஆனைக்காவில் கோவில் கொண்டுள்ள இறைவனைத் தம்மை மறந்து போற்றுவார், பயன்பெறுவார் என்று திருஞானசம்பந்தர் திட்டவட்டமாய்த் தெரிவிக்கிறார்.

வானைக் காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக் காவில் இன்மொழி தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக் காவல் வேண்டுவோர்க்கு ஏதும் ஏதம் இல்லையே


திருநாவுக்கரசர் திருவானைக்கா இறைவன்மீது மூன்று பதிகங்கள் பாடியுள்ளார். ஒன்பது வாயில்கள் கொண்ட நம் உடல் , அழுகிக் கழுகுகள் தின்னும் நிலைக்குப் போவதற்குமுன் இறைவன் திருவடிகளைத் தொழுது மனமுருகித் தூய மலர்கள் தூவிப் பாடுவோமானால், ஆனைக்கா அண்ணல் நமக்குத் திருவருள் பாவிப்பார்.
இதனை ,
“” ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலுங்
கழுகு ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்று
அழும வர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே””.

என்று பரிந்துரைக்கிறார்.


நாம் மனமுருகி அழுதால்தான் இறைவனருள் பெறலாம் என்கிறார் சுந்தரர்.
இதனை,
“” செழுமலர்க் கொன்றையும் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்டு
அழுமலர்க் கண்ணினை யடிவர்க் கல்லால்
அறிவரி தவன் திரு வடியினை இரண்டும் ””

அவரது திருப்பாடலால் அறிய முடிகிறது.
இறைவனை மனமுருகிப் பாடினால்தான் அவனது திருவருளை அடைய முடியும் என்பது மாணிக்கவாசகரின் கருத்து. இதனை,

“” யானே பொய்யேன் னெஞ்சும்
பொய்யேன் அன்பும்பொய்
ஆனால் வினையே னழுதால்
உன்னைப் பெறலாமேறு “”

என்று தெரிவிக்கிறார்.
புராணங்களும், வரலாறுகளும், கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் சிறப்பித்துக் கூறும் திருவானைக்கா , திருச்சியின் பெருமைகளுள் ஒன்று. வாய்ப்புக்குக் காத்திராமல், வாய்ப்பினை ஏற்படுத்திச் சென்று வரவும். !





Download As PDF

மொத்தம் எத்தனை பதிவுகள்

share

e-referrer

படிப்பவர்கள்

online counter

FeedBurner FeedCount

மேலே

Click to go to top
Click to comment

தொடர்பு கொள்ள

Map

flag counter

free counters

map

Photobucket