1. கிரிக்கெட்
2. உடுமலைப்பேட்டை
3. மொபைல் ட்ரிக்ஸ்
4. தமிழ் தகவல்
5. இயற்பியல்
6. கோவை மண்டலம்
7. பாடல்
திருக்குறள்
Friday, December 31, 2010
புது வருடம் 2011
Thursday, December 30, 2010
தமிழகத்தில் அரசு வேலைக்காக 62 லட்சம் பேர் காத்திருப்பு: அரசு புள்ளி விவரத்தில் தகவல்
Tuesday, December 28, 2010
ஆல்பம்
- அலட்சியத்தால் அவசியத் தேவை வீண்: அத்தியாவசியத் தேவையான குடிநீர் பல மாதங்களாக இப்படி வீணாவதால், லாரி ஊழியர்கள் குளிக்க பயன்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது கவனிப்பார்களா? இடம்: சென்னை மாதவரம் ஜி.என்.டி.,சாலை சி.எம்.டி.ஏ., லாரி வளாகம் அருகில்.
-
தென் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் ஏராளமான மான் சுற்றித்திரிகின்றன. அங்குள்ள உணவு விடுதிக்கு காலை வேளையில் வந்த மான்களுக்கு பணியாளர் ஒருவர் உணவு கொடுக்கிறார். -
பாராமுகம் ஏன்? திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது வார்டு அண்ணா நகர் பூங்கா அருகில் பழமையான மரம் மர்ம நபர்களால் வெட்டப்பட்டது. வெப்பமயமாதல் குறித்து உலக நாடுகள் தீவிரமாக ஆலோசனை நடத்தும் இத்தருணத்தில், திருப்பூரில் மட்டும் மரங்களை வெட்டுவது தொடர்கதையாக நடக்கிறது. மாவட்ட நிர்வாகமோ, பாராமுகமாகவே இருக்கிறது.
-
திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் அதிகளவு பனி கொட்டுகிறது. மங்கலம் ரோடு பகுதியில் அதிகாலை பெய்த பனியால், சூரியன் தன் வெப்பக்கதிர்களை வெளிக்காட்ட முடியாமல் மேகப்பெண்ணின் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதைப்போல் காட்சியளித்தார்.
-
தென் சென்னை பொழிச்சலூர், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் கண்ணகி சாலை மழை நீர் தேங்கி, குட்டைபோல் காட்சியளிக்கிறது. -
தென் சென்னை பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் துவங்கிய தேசிய சிறார் அறிவியல் மாநாட்டில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
-
திருவள்ளூர் ஸ்ரீஐம்பொன் அய்யப்பா சேவா சங்கம் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் வழியில், பசுமையாகவும் தண்ணீர் நிறைந்தும் காணப்படும் பெரும்பள்ளம் அணையின் அழகிய தோற்றம்.
-
மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள் கண்ணாடி அறையில் 12ம் பாசுரத்தின்படி ராவண வதம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
- பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு இந்தாண்டுக்கான சிறந்த இந்தியன் விருது வழங்கப்பட்டது. இதை, பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சுசில் குமார் மோடி வழங்கினார்.
- காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி, மேற்கு மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் பெர்காம்பூரில், 900 கி.மீ., சைக்கிள் பேரணியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சைக்கிள் ஓட்டி துவக்கி வைத்தார்.
- தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி, காங்கிரஸ் எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் ஐதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோல்கட்டாவில் அம்மாநில கவர்னருடன் நடந்த முக்கிய கூட்டத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார், கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
- 2ஜி ஸ்டேக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசின் நிலைக் குறித்து பார்லிமென்டில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில், பா.ஜ வின் மூத்த தலைவரும், பொது கணக்கு குழுத் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி விளக்கமளித்தார்.
- பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் தேசிய சிறார் அறிவியல் மாநாட்டை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். உடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேசன்.
- எலவனாசூர்கோட்டையில் பயனாளிகளுக்கு அமைச்சர் பொன்முடி இலவச கலர் டிவி வழங்கினார். அருகில் கலெக்டர் பழனிசாமி.
- கள்ளிமந்தையத்தில் நடந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்,ஆர்.கே.பன்னீர்செல்வம் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர். அரசு கொறடா சக்கரபாணி, கலெக்டர் வள்ளலார்.
- சென்னை வந்த மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சென்னை அருகே உள்ள முதலைப் பண்ணைக்கு வந்து பார்வையிட்டார்.
- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ., ராமன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
-
Monday, December 27, 2010
வித விதமான போட்டோகள்
உங்களுடைய அல்லது எதாவது போட்டோவை வித வித மான எபக்ட்ஸ் கொண்டு வர இங்கு கிளிக் செய்யவும். Download As PDF
விடுமுறையை கழிக்க தீவுக்கு சென்றவர்கள் 20 பேர் பலி: ராமநாதபுரம் அருகே சுனாமி நினைவுநாளில் சோகம்
ராமநாதபுரம் : விடுமுறையை கழிக்க தீவுக்கு உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தே.மு.தி.க., - காங்., மோதல் : சம்பவம் நடந்த தகவல் தெரிந்து அரசியல் கட்சியினர் குவியத் துவங்கினர். அமைச்சர் தங்கவேலன், காங்., எம்.எல்.ஏ., ஹசன் அலி, மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி ஆகியோர் வந்தனர். "பிரேத பரிசோதனை குழுவினரை சம்பவ இடத்திற்கு வருமாறு' எம்.எல்.ஏ.,விடம் தே.மு.தி.க., மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா கூறினார்.இதில் மோதல் உருவாக, இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 15 நிமிடம் தொடர்ந்த இந்த மோதலை, அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து, இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர்.
ராஜாவிடம் விசாரணை கிடைத்தது என்ன?
Saturday, December 25, 2010
2 வது நாளாக ராஜாவிடம் சி.பி.ஐ., விசாரணை: டாக்டருடன் ஆஜரானார்
தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் இன்றும் (சனிக்கிழமை) 2 வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே நேற்று 9 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணைக்காக ராஜா சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரானார். தனது உடல்நலம் கருத்தில் கொண்டு அவரது டாக்டருடன் ராஜா வந்தார்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் சரமாரியாக கேட்டனர். ஆதாரங்களை முன்கூட்டியே திரட்டி வைத்து கொண்டு, அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியதால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இன்னும் பல விஷயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக எழுந்த சர்ச்சையால், கடந்த மாதம் பதவியை ராஜினாமா செய்த ராஜாவுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 160ன் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை ஏற்ற ராஜா, கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து டில்லி சென்றார். நேற்று காலை 10.30 மணிக்கு அவர், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகினார். 10.45 மணிக்கு அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்க துவங்கினர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாகவும், கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியாக செயல்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தலைவர் நிரா ராடியாவுடனும் தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் குறித்தும், சில தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கு விதிமுறைகளை மீறி சாதகமாக செயல்பட்டது குறித்தும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்தேதியிட்டு சிலருக்கு லைசென்ஸ் வழங்கியது,
தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கும், ராஜாவின் உறவினர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்கப்பட்டன.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சேகரிக்கப்பட்டிருந்த தகவல்கள் அடிப்படையில், நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விசாரணைக்குப் பின், பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பது மணி நேரம் விசாரணை : முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக விசாரிக்க, சி.பி.ஐ., அனுப்பிய சம்மனை ஏற்று, டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமையகத்தில் நேற்று காலை ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின் வெளியே வந்த ராஜா, ""சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். விசாரணை தொடர்வதால், இதற்கு மேல் எதுவும் என்னால் தெரிவிக்க முடியாது,'' என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது?கேள்விக் கணைகளால் ராஜாவை திணறடித்த சி.பி.ஐ.,
தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னென்ன? அதற்கு அவர் அளித்த பதில்கள் என்ன? என்பது தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் விவரம் வருமாறு:"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சராக இருந்த ராஜாவை மையமாக வைத்து, தங்களது அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பம் முதலே சி.பி.ஐ., அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுடன் தொடர்பில் இருந்த உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகள் என, அவரைச் சுற்றியிருந்த பலரையும் வளைத்து சோதனை நடத்தி, ஏராளமான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளனர். இந்நிலையில், கடைசியாக ராஜாவை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியதையடுத்து, நேற்று அவர், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜரானார். கடந்த புதன் கிழமை இரவே, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்து சேர்ந்து விட்ட ராஜா, நேற்று முன்தினம் முழுக்க தனது வீட்டிலேயே ஓய்வில் இருந்தார்.
நேற்று காலை 9.45 மணியளவில் தனது வீட்டை விட்டுக் கிளம்பிய அவர், டில்லி சி.ஜி.ஓ., காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.ராஜா வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து சி.பி.ஐ., அலுவலகம் வந்து சேரும் வரை, மீடியாக்கள் அவரது காரை விடாமல் துரத்திச் சென்று கொண்டே இருந்தன. சி.பி.ஐ., அலுவலகத்திற்குள் 10.30 மணியளவில் ராஜா நுழைந்தார். சி.ஜி.ஓ., காம்ப்ளக்ஸ் என்பது மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ள இடம்.விசாரணைக்காக ராஜா வருவதையடுத்து குவிந்த மீடியாக்கள் காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொத்தம் நான்கு தளங்களைக் கொண்ட சி.பி.ஐ., அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில், ராஜாவிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:ராஜாவிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டுமென்பதை சி.பி.ஐ., அதிகாரிகள் தயாரித்து வைத்திருந்தனர். அந்த வகையில், 100 கேள்விகள் வரை தயார் செய்து வைத்து, ராஜாவிடம் துருவித் துருவி விசாரித்தனர். லைசென்ஸ்கள் அளிப்பதில் நடந்த முறைகேடு, அவற்றின் மூலம் வந்த பணம் மற்றும் அந்த பணம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்ற முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை விருப்பம் போல சில கம்பெனிகளுக்கு அளிக்க வேண்டியதற்கான காரணங்கள் குறித்தும், அதற்காக தேதி மாற்றம் செய்ததன் பின்னணி, ஒரே நாளில் மிகப்பெரிய தொகைக்கு வரைவோலை எடுக்கப்பட்டதன் மர்மம் குறித்தும் கேள்விகள் இருந்தன.
ராஜாவின் உறவினர்கள் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைக்கப் பெற்ற ஆவணங்களை ஆதாரமாக வைத்து பெரும்பாலான கேள்விகள் இருந்தன. தவிர, இடைத்தரகர் நிரா ராடியாவுடனான உறவு, ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராடியா மூலமாக நடத்தப்பட்ட பேரங்கள், இதில் சம்பந்தப்பட்ட பிற நபர்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.வெளிநாடுகளுக்கு ஹவாலா மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விதம் குறித்தும் கேட்கப்பட்டன. ராஜாவின் டில்லி வீட்டில் நடந்த சோதனையின் போது, ஸ்பெக்ட்ரம் குறித்த தொலைத்தொடர்புத் துறை ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன.
குறிப்பாக பிரதமருக்கும், ராஜாவுக்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்தின் போது பிரதமர் தரப்பில் எழுதப்பட்டிருந்த அரசாங்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ராஜினாமாவுக்கு பிறகு தான், ராஜா வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. பதவியை ராஜினாமா செய்த பிறகும் கூட, அந்த முக்கியமான அரசு ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாரிகள் தரப்பில் இவ்வாறு கேட்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்களை ராஜா தயார் செய்து கொண்டு வந்திருந்ததாக தெரிகிறது. டில்லிக்கு கிளம்புவதற்கு முன், சென்னையில் அரசினர் தோட்டத்தில் தங்கியிருந்தபோதே இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., கிளப்பும் சிக்கலான கேள்விகளுக்கு என்ன மாதிரியான பதில்களை அளிக்க வேண்டுமென்பது குறித்து திறமை வாய்ந்த வக்கீல்களைக் கொண்ட குழு, ராஜாவுக்கு அறிவுரை வழங்கி அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.ராஜாவிடம் மதியத்திற்கும் மேலும் விசாரணை தொடர்ந்ததால், மதிய உணவு வெளியிலிருந்து வாங்கி வரப்பட்டு ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
Download As PDF
பொது படங்கள்
- புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையினையொட்டி குஜராத்தில் சூரத் நகரில் உள்ள தனியார் பள்ளிக்குழந்தைகள் சான்டா கிளாஸ் வேடமணிந்து 2011- ம் ஆண்டு எண் வடிவில் அமர்ந்து சாகசம் நிகழ்த்தினர்.
-
கிறிஸ்துமஸ் பண்டிகையினையொட்டி புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்ஸன் பட்நாயக், ஒரிசாவின் பூரி கடற்கரையில் வடிவமைத்துள்ள 160 அடி நீளமுள்ள சான்டா கிளாஸ் மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்தது.
-
சென்னையில் நடந்து வரும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவின் 2ம் நாளான நேற்று அரங்கில் குவிந்த மக்களில் ஒரு பகுதியினர்.
-
இரவும் அல்லாது பகலும் அல்லாது இந்த நீல வண்ண மேகம் பிரதிபலிக்கும் காட்சி நமது கண்ணை மட்டும் அல்ல மனதையும் ஈர்க்கிறது. இடம்: ஆழியாறு அணை.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு 8ம் நாளான நேற்று வேடுபறி நிகழ்ச்சியில் ஸ்ரீரெங்கநாதர் குதிரை வாகனத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகில், மணல் வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
-
ஆமதாபாத்தில் நடந்த செஸ் திருவிழாவில், ஒரே நேரத்தில் 22 ஆயிரத்து 480 பேர் விளையாடி, கின்னஸ் உலக சாதனை படைத்தனர். இதில் பங்கேற்ற மாணவர்களுடன் காய்களை நகர்த்தி மகிழ்ந்த ஆனந்த்.
- எம்.ஜி.ஆர்.,நினைவு நாளை முன்னிட்டு, சேலம் நெத்திமேட்டில் அ.தி.மு.க.,சார்பில் பொதுவிருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் உணவு அருந்தினர். இடம்: மாணிக்கம்மாள் மண்டபம்.
-
கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்க 24ம் ஆண்டு விழா முன்னிட்டு, மும்மூர்த்தி ஆலங்காரத்தில் அருள் பாலித்த சுவாமிகளை மனமுருகி வேண்டிய சிறுமி.
-
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸில் உள்ள சந்திரமஹால் திருமண மண்டபத்தில் நடந்த மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் நடந்த குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை மேயர் ரேகாபிரியதர்ஷினி வெளியிட, அதை எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா பெற்றுக் கொண்டார்.
-
திருச்சி ஆர்.இ.சி.,யில் (தற்போதைய என்.ஐ.டி.) படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 1981- -85ம் ஆண்டு படித்த மாணவர்கள் எடுத்துக்கொண்ட குரூப் ஃபோட்டோ.