டோக்கியோ, மார்ச் 12,2011
வடகிழக்கு ஜப்பானில் சுனாமிப் பேரலை தாக்கியதின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது.
இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 600 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், செண்டாய் நகர் பகுதியில் மட்டும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பேரழிவால், ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து 2,15,000 பேர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.
தற்போது, சுனாமிப் பேரலையால் வீடுகளையும் கட்டடங்களையும் சூழ்ந்த தண்ணீர் வடிந்து வரும் நிலையில், மாடிகளின் மேற்கூரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அணு உலைகள் பாதிப்பு... அவரச நிலை...!
சுனாமிப் பேரலை தாக்கியதின் காரணமாக, புகுசிமா பகுதியில் உள்ள இரண்டு முக்கிய அணு உலைகளின் பாதுகாப்பு செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அணு உலைகள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி வசிக்கும் பல்லாயிரக் கணக்காண மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜப்பான் சுனாமி... செய்தித் துளிகள் * ஜப்பானில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் இது. * வடகிழக்கு கடற்கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கின. * கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவு. * செண்டாய் நகரில் ஒரே நாளில் 300 சடலங்கள் மீட்பு. * ஏறத்தாழ 400 பேர் காணவில்லை என்கிறது ஜப்பான் போலீஸ். * ஒட்டுமொத்த அழிவை மதிப்பீடு செய்வது இப்போதைக்கு மிகக் கடினம் என்கிறார்கள் நிபுணர்கள். * சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. * பகுஷிமா டேய்சி அணு உலை பாதித்ததால் மூடப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சுமார் 2000 பேர் வெளியேற்றம். * மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலையில் தீ விபத்து. * தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரிக்கை. * பசிபிக் கடல் பகுதி நாடுகளில் சுனாமி எச்சரிக்கை. ஹவாய் தீவுகளை குறைந்த மீட்டரில் சுனாமி எழுந்ததால் பாதிப்பில்லை. * லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலியிலும் சுனாமி எச்சரிக்கை. |
டோக்கியோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 மைல்கள் ஆழத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான பூகம்பம், ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியிருந்தது.
கடலில் எழுந்த சுனாமிப் பேரலைகள் கப்பல்கள், கட்டடங்கள் என அடித்து துவம்சம் செய்தபடி நிலப் பகுதிகளை கடுமையாகத் தாக்கியது.
இந்த சுனாமி தாக்குதலுக்கு கடற்கரைப் பகுதியான செண்டாய் மிக அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் தொடர்ச்சியாக ரஷ்யா, தைவான், இந்தோனேஷியா, ஹவாலி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டு வரும் சுனாமி காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சுனாமிப் பேரழிவால், ஜப்பான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சேதம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசிபிக் கடலில் இருந்து எழும்பிய சுனாமிப் பேரலைகள் 13 அடி வரை மேலெழுந்து ஜப்பானின் கடலோர நகர் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அணு உலை நிலையங்கள், முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
டோக்கியோ, ஒசாகி, கியோடோ உள்ளிட்ட நகர்களில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும், இந்தியாவுக்கு ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவு பூகம்பங்கள்...
* ஜூலை 27,1976, தாங்ஷான், சீனா, பலி - 6,55,000 - ரிக்டர் 7.5
* டிச.26, 2004, சுமத்ரா, இந்தோனேஷியா, பலி - 2,27,898 - ரி9.1
* ஜன.12, 2010, ஹைத்தி, பலி - 2.22,570 - ரி7.0
* மே 12, 2008, சிச்சுவான், சீனா, பலி - 87,587 - ரி7.9
* அக்.8,2005, பாகிஸ்தான், பலி - 80,361 - ரி7.6
* மே 31, 1970 சிம்போத், பெரு, பலி - 70,000- ரி7.9
* ஜூன் 20, 1990, மஞ்சில், ஈரான், பலி - 40,000, ரி7.4
* டிச.26, 2003, பாம், ஈரான், பலி - 31,000, ரி6.6
* ஜன.26, 2001, குஜராத், இந்தியா, பலி - 20,023, ரி7.7
* ஆக.17 1999, இஸ்மித், துருக்கி, பலி - 17,118, ரி7.6
* செப்.30, 1993 லதூர், இந்தியா, பலி - 9,748, ரி6.2
* ஜன. 16, 1995, கோபே, ஜப்பான், பலி - 5,530, ரி6.9
* ஜூலை 27,1976, தாங்ஷான், சீனா, பலி - 6,55,000 - ரிக்டர் 7.5
* டிச.26, 2004, சுமத்ரா, இந்தோனேஷியா, பலி - 2,27,898 - ரி9.1
* ஜன.12, 2010, ஹைத்தி, பலி - 2.22,570 - ரி7.0
* மே 12, 2008, சிச்சுவான், சீனா, பலி - 87,587 - ரி7.9
* அக்.8,2005, பாகிஸ்தான், பலி - 80,361 - ரி7.6
* மே 31, 1970 சிம்போத், பெரு, பலி - 70,000- ரி7.9
* ஜூன் 20, 1990, மஞ்சில், ஈரான், பலி - 40,000, ரி7.4
* டிச.26, 2003, பாம், ஈரான், பலி - 31,000, ரி6.6
* ஜன.26, 2001, குஜராத், இந்தியா, பலி - 20,023, ரி7.7
* ஆக.17 1999, இஸ்மித், துருக்கி, பலி - 17,118, ரி7.6
* செப்.30, 1993 லதூர், இந்தியா, பலி - 9,748, ரி6.2
* ஜன. 16, 1995, கோபே, ஜப்பான், பலி - 5,530, ரி6.9
- ஆதாரம்: USGS
0 comments:
Post a Comment