மேல்ஓடு அற்ற ஒரு நத்தை போக்குவரத்து வீதி விளக்கில் ஏற்படுத்திய கோளாரின் காரணமாக இடம்பெற்ற விபத்தில் 19 வயது யுவதி பரிதாபமாக மரணமடைந்தார்.
இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.
மெக்டொனால்ட்ஸில் பணிபுரியும் 19 வயதான கெடிடேக்லி என்பவரே மரணத்தைத் தழுவினார்.
வீதி விளக்கின் சர்கிட்போர்ட்டில் நத்தை புகுந்ததால் சுமார் 20 நிமிடநேரம் இந்தப் பகுதியில் போக்குவரத்து விளக்குகளின் செயற்பாடு ஸ்தம்பித்துப் போய்விட்டது. இதனாலேயே இந்த விபத்தும் இடம்பெற்றது.
டேம்வோர்த் மேற்கு மிட்லான்ட் பகுதியில் பாலமொன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்து நடந்த போது கெடிடேக்லியே தனது வாகனத்தைச் செலுத்திச் சென்றார்.
இவரது காரோடு மோதிய மற்ற காரின் சாரதியும் ஒரு 18 வயது இளைஞராவார்.
எதிரே கெடியின் வாகனம் வருவதைக் கண்டபோதும் பிரேக் பிடிப்பதற்கான நேரம் தனக்கு இருக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கெடி வாழ்க்கையைப் பெரிதும் ரசித்தவர் மற்றவருக்காக எதையும் செய்யும் பண்பு கொண்டவர்.
எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன் இருப்பவர்.
ஒரு சமையல்கலை நிபுணராக உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்தவர் என்று தனது மகள் குறித்து கவலையுடன் தெரிவித்துள்ளனர் அவரின் பெற்றோர்கள்.

0 comments:
Post a Comment