சென்னை : ""குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி:சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே?
இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே...
இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
ராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது?
உங்களால் வெட்ட முடியாது.
ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே?
அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்
Download As PDF















0 comments:
Post a Comment