சென்னை : ""முல்லைப் பெரியாறு அணையை இரண்டு தரப்பிலிருந்தும் வல்லுனர்களை மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில், மீண்டும் பார்வையிட அனுமதிக்கலாம்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தற்போதுள்ள தி.மு.க., அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலரின் தொழில் நலனை பெரிதாக கருதி, தவறாக செயல்படுவதே எனது கவலையாக உள்ளது. அழகிய மாநிலமான கேரள மக்களையும், கேரள அரசையும் நான் கேட்டு கொள்வதெல்லாம் இந்தப் பிரச்னையில் உள்ள நியாயத்தை ஏற்க வேண்டும் என்பதே.தற்போதுள்ள அணைக்கு ஆபத்து என்பதெல்லாம் அடிப்படை ஆதாரமின்றி வேண்டுமென்ற திட்டமிட்டு பரப்பப்படும் செய்தி. பொறியியல் வல்லுனர்கள் பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர்.
தேவைப்படின், கேரள மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இரண்டு தரப்பிலிருந்தும் வல்லுனர்களை, மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் மீண்டும் பார்வையிட அனுமதிக்கலாம்.ஆனால் ஆதாரமற்ற, அச்சத்தின் காரணமாக, தமிழகத்தின் வளமான ஐந்து மாவட்டங்கள் வறண்டு போய் பாலைவனமாகி, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையை உருவாக்க வேண்டாம் என, கேரள அரசை நான் கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Download As PDF
0 comments:
Post a Comment