கொச்சின் to பாலக்காடு
கொச்சினிலிருந்து பாலக்காடு வரை பேருந்துப் பயணம். (Direct Bus கெடக்கலப்பா!) பஸ் ஸ்டாண்டு கேரள மக்களைப் போல எளிமையாக இருந்தது. பராமரிப்பு! இந்தியர்கள் பராமரிப்பதை மற்றவர்களைக் காட்டிலும் சக இந்தியர்கள் நாசம் செய்வது அதிகம். So, எதையுமே பராமரிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
பேருந்து நிலையங்கள் சிறியவை. ரத்த நிறப் பேருந்துகள் உள்ளே வருவதும், போவதுமாக இருந்தன. பெரும்பாலான பஸ்களின் நெற்றியில் மலையாளமே! அதனால் ஒருத்தருக்கு நாலு பேர விசாரிச்சுதான் ஏற முடியும். தாய்மொழிப் பற்று தேவைதான். அதுக்காக இப்பூடியா?
பத்து கிலோமீட்டருக்கு ஒரு சர்ச்சாவது இருக்கிறது. சிறிய, சிறிய தேவாலயங்கள். உலகின் அனைத்துத் தென்னை மரங்களையும் வெட்டிவிட்டாலும், கேரளாவில் எப்படியாவது மிஞ்சும். அவ்வளவு தென்னை மரங்கள். வெவ்வேறு அளவுகளில் அழகழகாய்!
கேரளப் பெண்கள் எல்லாருமே அழகு. என்னோட பஸ் Gents Special ன்னு சந்தேகப்படும் அளவுக்கு ஆண்களோ ஆண்கள். நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் முடிப்பார்கள் என்று நம்பலாம்.
எளிமை கலந்த அழகுதான் கேரள நகரங்களின் அடையாளம். நுணுக்கங்களும், ரசனைகளுமாய்க் கட்டப்பட்ட தனித்தனி வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு.
உலகமயமாக்கல் இன்னும் கேரளத்தின் எழிலை முழுமையாக விழுங்கிவிடவில்லை. இன்னும் பல வருடங்களுக்குத் தாங்கும். குறிப்பாகக் கம்யூனிஸமும், கர்த்தரும் கேரள பூமியின் இரு கண்களாக இருக்கும்வரை!

கொச்சின் கடற்கரை! (பிறந்த நாள் இடுகை!)
கேரளச் சுற்றுலாத்துறைக்குக் கடற்கரையின்மேல் என்ன கோபமென்று தெரியவில்லை. மிக மட்டமாகப் பராமரிக்கிறார்கள். இன்னும் எவ்வளவோ மேம்படுத்த வேண்டியிருக்கிறது. ஆவலோடு சென்று ஆதங்கத்தோடு திரும்பினேன்.
சிமெண்ட் நடைபாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கணிசமான அளவில் மக்களின் நடமாட்டம் உள்ள கடற்கரை. மத்தியான நேரத்தில் கூட மக்கள் நிறைய இருந்தனர். முன்பு கடல் நீரின் நிறம் நல்ல நீலத்தில் இருந்ததாகவும், தற்போது சிறிது சிறிதாக நிறமிழந்து வருகிறது என்பது பலரின் கருத்து. கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.