Microsoft Bing - சில தகவல்கள்
நண்பர் அக்னிப்பார்வைக்கு முதலில் நன்றி. கடந்த மாதம் Google vs Bing என்ற இடுகையின் பின்னூட்டத்தில் ஒரு தளமும், விரிவான இடுகையும் தரும்படிக் கேட்டிருந்தார். பல காரணங்களால் நடுவில் மறந்தே போயிற்று. திடீரென நினைவில் உதித்ததால் இடுகை.
Powerset, கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம். இவர்களின் Concept, Bing. மைக்ரோசோஃப்ட் வாங்கி, சில மாறுதல்கள் செய்து Bing என வெளியிட்டுவிட்டார்கள். Microsoft ன் முந்தைய குழந்தைகள், MSN Search, Windows Live Search ஆகியவை சோபிக்கவில்லை. எங்கு நோக்கினாலும் Google. கையைப் பிசைந்து கொண்டே Bill Gates எடுத்த முடிவு Bing. இன்று சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. Alexa Page Rank 48 !
Powerset: Natural Language Search Engine ஆவதற்கான ஆயத்தங்களில் இருக்கிறார்கள். அனைத்துத் தேடியந்திரங்களும் Keywords ஐ தனித்தனியாகக் கொண்டு தேடும். Natural Language Search Engine கேள்வியை முழுமையாக உணர்ந்து கேட்டவரின் விருப்பதிற்கேற்பத் தேடும் என்கிறார்கள். (ஓடிப்போன காதலியெல்லாம் கிடைக்காது!).
உதாரணமாக “ டெண்டுல்கரின் ஆண்டு வருமானம் எவ்வளவு? “ என்று கேட்டால், டெண்டுல்கர், ஆண்டு, வருமானம் இவற்றைத் தனித்தனியாகத் தேடாமல் கேள்விக்குப் பதிலளிக்கும் என்று கருதப்படுகிறது. Google உட்பட பிறதளங்களில் கூட்டலோ, பெருக்கலோ சேர்த்துத் தேடிவருகிறோம். இது இன்னும் சிறப்பான தேடலுக்கு வழிகாட்டும் என்பது நிபுணர்கள் கருத்து.
தற்போது விக்கிபீடியாவுக்கான சிறப்புத் தேடியந்திரமாக இருக்கிறது Powerset. இதரவிவரங்களைத் தளத்தில் காணவும். www.powerset.com