Widget By Devils Workshop
புதிய இடுகைகள் விரைவில் vanakkam

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text





என்னுடைய மற்ற தளங்கள்


1. கிரிக்கெட்


2. உடுமலைப்பேட்டை


3. மொபைல் ட்ரிக்ஸ்


4. தமிழ் தகவல்


5. இயற்பியல்


6. கோவை மண்டலம்


7. பாடல்

அனைவரையும்வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

Clipart

திருக்குறள்

Thursday, August 26, 2010

விமான அருங்காட்சியகம் - பெங்களூர்

விமான அருங்காட்சியகம் - பெங்களூர் - பகுதி - 1

2001 ஆம் வருடம், இந்தியாவிற்கு முக்கியமான வருடம். தேசத்தின் முதல் விமான அருங்காட்சியகம் ஆகஸ்ட் 30, 2001 ல் துவக்கப்பட்டது. ஹெச்.எ.எல் நிறுவனத்தின் 60 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம்.10 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு விமானங்களின் மாதிரிகள் தந்த பிரமிப்பு இன்னும் தீரவில்லை. இந்தப் பதிவில் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதிப் புகைப்படங்கள் தந்திருக்கிறேன். பெரும்பாலும், விமான மாதிரிகள் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்த பதிவுகளில் மேல்விவரங்களும், படங்களும் தருகிறேன். படங்களில் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்.

விமானங்களின் மாதிரிகள், புகைப்படங்கள், விமான உதிரிபாகங்களின் மாதிரிகள் மிகச் சிறந்தமுறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மலர்களும், செடிகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது, கூடுதல் மரியாதையை ஏற்படுத்துகிறது. ஊழியர்களுக்கு எனது பாராட்டுக்கள். சுற்றிப்பார்த்ததில், நானறிந்தது சொற்பமே! என் அறிவின் அளவு அவ்வளவே! யாவரும் கட்டாயம் காண வேண்டிய இடம். குறிப்பாக, மாணவர்கள்.




விமான அருங்காட்சியகம் - பெங்களூர் - பகுதி - 2

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிட்டட் (H.A.L) ,நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம். கிரண், புஷ்பக், சீட்டா, சேட்டக் போன்ற விமானங்களின் மாதிரிகளும், தகவல்களும் ஆச்சரியம் தருபவை. இவை தவிர இன்னும் பல்வகை விமானங்கள் பற்றிய தெளிவு பெறலாம்.
இப்பதிவில், விமான அருங்காட்சியகத்தின் அடுத்த பகுதிப் புகைப்படங்கள் மற்றும் செய்திகள். அடுத்த பதிவில், அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள அரிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள். இங்கு, விமானக் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குறித்த தகவல்களும், மாதிரிகளும் இடம் பெற்றுள்ளன. விமான இயலின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் பல்வகை விமான உதிரிப்பாகங்களின் மாதிரிகள் நிச்சயமாக நமக்கெல்லாம் நல்லதோர் கல்வி.

அசம்பாவிதங்களின் போது விமானத்தின் கடைசி வினாடி நிகழ்வுவரை நடந்ததை அறிய உதவும் கருப்புப் பெட்டி நமது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படை பயன்படுத்திய, பயன்படுத்தும் விமானங்களின் குறிப்புகள் வியப்பளிக்கின்றன. ஒவ்வொரு விமான மற்றும் உதிரிப்பாகங்களின் மாதிரிகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப விவரங்கள் முழுமையாகப் புரியாவிட்டாலும், ரசிக்க முடிந்தது. இத்துறை குறித்த தகவல் பெற விரும்பும் மாணவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய இடம்.

கர்னாடக மாநிலத்தைப் பெருமிதம் கொள்ளச் செய்யும் அருங்காட்சியகம்.



விமான அருங்காட்சியகம் - பெங்களூர் - பகுதி - 3

இப்பதிவின் பெரும்பாலான புகைப்படங்கள் , ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் 70 ஆண்டு காலச் சாதனை விளக்கப் படங்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு, இந்நிறுவனத்தின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. 1940 ல் ஏற்படுத்தப்பட்ட இந்நிறுவனம், இன்று 16 உற்பத்தி மையங்களும், 9 ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிலையங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டது.

12 விதமான விமானங்கள் இவர்களது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. 13 வகை உரிமம் பெற்ற விமானத் தயாரிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள். இதுவரை, 3300 விமானங்கள், 3400 விமான எஞ்சின்கள் தயாரித்துள்ளனர். மேலும், 7700 விமானங்கள், 26000 எஞ்சின்களைப் பழுதுபார்த்துள்ளனர்.

செயற்கைக்கோள் ஏவும் வாகனம் PSLV (Polar Satellite Launch Vehicle), GSLV (Geo Stationary Launch Vehicle), INSAT (Indian National Satellite) மற்றும் IRS (Indian Remote Satellite) போன்ற செயற்கைக்கோள்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் இவர்களின் பங்கு கணிசமானது.
சொன்ன தகவல்கள் குறைவானவையே. சென்று வந்து மேலும் சொல்லுங்கள்!




Download As PDF

மொத்தம் எத்தனை பதிவுகள்

share

e-referrer

படிப்பவர்கள்

online counter

FeedBurner FeedCount

மேலே

Click to go to top
Click to comment

தொடர்பு கொள்ள

Map

flag counter

free counters

map

Photobucket