உலகளவில் நிறைய தேசிய பூங்காக்கள் உள்ளன. இதில் கிரீன்லாந்தில் உள்ள 'வடகிழக்கு கிரீன்லாந்து தேசிய பூங்கா' உலகின் மிகப்பெரிய பூங்கா என அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாக திகழ்கிறது. இது 1974ல் தொடங்கி, 1988ல் விரிவு படுத்தப் பட்டது. இதன் பரப்பளவு 9,72,000 சதுர கி.மீ. பூங்காவின் சில பகுதிகள் பனிசூழ்ந்தது. இதுதான் டென்மார்க்கில் தொடங்கப்பட்ட முதல் பூங்கா. 5,000 முதல் 15,000 கத்துாரி எருமைகள், துருவக்கரடிகள் மற்றும் சில பறவைகள் பூங்காவின் கடற்கரை ஓரத்தில் காணப்படுகின்றன.
Download As PDF
1. கிரிக்கெட்
2. உடுமலைப்பேட்டை
3. மொபைல் ட்ரிக்ஸ்
4. தமிழ் தகவல்
5. இயற்பியல்
6. கோவை மண்டலம்
7. பாடல்
திருக்குறள்
Monday, July 22, 2019
Friday, September 23, 2016
ரேஷன் கடைகளில், அக்டோபர், 1 முதல், காகித ரசீது போடும் நிலை இருக்காது; அதற்கு பதில், நவீன கருவியில் ரசீது போடும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால், ரேஷன் கார்டுதாரர்களின், மொபைல் போனிலேயே, எஸ்.எம்.எஸ்., தகவலாக ரசீது கிடைத்து விடும்.
தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. தற்போது, ரேஷனில் வாங்கும் பொருட்களுக்கு, காகிதத் தில், ரசீது தரப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில், பலர் ரேஷன் பொருட்கள் வாங்கு வது இல்லை.
எஸ்.எம்.எஸ்., தகவல்
அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன்
சேர்ந்து, கடை ஊழியர்கள் பொருட்களை வினியோ கம் செய்தது போல, போலி ரசீது தயாரித்து, கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.
இந்த முறைகேட்டை தடுக்க, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில்,'ஆதார்' அடையாள அட்டை, 'ஸ்கேன்' செய்யப்படுகிறது.
இந்நிலையில், அக்., 1 முதல், காகித ரசீதுக்கு பதில், 'பாயின் ஆப் சேல்' கருவியில், ரசீது போடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டில் உள்ள, குடும்ப தலைவரின் மொபைல் போன் எண் பெறப் படுகிறது.
அதனால், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், பொருட்களை வாங்கிய தற்கான ரசீது போட்ட உடன், அந்த விபர பட்டியல், ரேஷன் கார்டு தாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., தகவலாக சென்று விடும்.
முறைகேட்டைதடுக்ககடைக்கு வந்த பொருட்கள், மக்களுக்கு வழங்கிய பொருட்கள் என, அனைத்து விபரங்களும், அந்தக் கருவியில் பதிவாகும்;
இந்த விபரங்கள் கட்டுப்பாட்டு அறையிலும் பதிவாகும் என்பதால், முறைகேட்டை தடுக்க முடியும். தமிழகம் முழுவதும், இந்த முன்னோடி திட்டம், அக்., 1 முதல் செயல்
பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் பயிற்சி
சென்னையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, இம்மாத துவக்கத்தில் தான், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டது. கருவியை பயன்படுத்துவது குறித்து ஊழியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், ஆதார் அட்டை, 'ஸ்கேன்' செய்யும் பணி இன்னும் முழுமை பெறவில்லை. அதனால், சென்னையை சுற்றிய மாவட்டங்களில், இத்திட்டத்தை, நவ., 1 முதல், செயல்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Download As PDF
Subscribe to:
Posts (Atom)